மேலும் அறிய

புற்றுநோயால் அவதிப்படும் ’மரம்’ யோகநாதன் ; சிகிச்சைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உதவ கோரிக்கை

பேருந்து நடத்துனராக உள்ள யோகநாதன், மரம் நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகளுக்காக துணை குடியரசு தலைவரிடம் பசுமை போராளி உள்ளிட்ட விருதுகளை வாங்கியவர்.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் யோகநாதன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். சிறுவயது முதல் மரங்கள் மீது கொண்ட தீராக்காதலால், தனது பணிக்கு நிகரான நேரத்தையும், தனது ஊதியத்தின் ஒரு பகுதியையும் மரங்கள் வளர்ப்பிற்கு செலவிட்டு வருகிறார். 36 ஆண்டுகளாக மரங்களை பாதுகாக்கும் பெரும் பணியை செய்து வருகிறார். இவர் பொது இடங்கள், அரசுப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்களில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நடவு செய்ததோடு மட்டுமின்றி, தொடர்ந்து பராமரித்தும் வருகிறார். விதை நேர்த்தி, மரம் நடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இலவசமாக மரக்கன்றுகளை வழங்குதல், அரிய வகை அழிந்து வரும் மரங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளை யோகநாதன் தொடர்ந்து செய்து வருகிறார். மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

மகாகவி பாரதியாரியரின் மிகப்பெரிய கனவான ’குயில் தோப்பு’ என்பதை காட்சியாக உருவாக்கும் வகையில்,அந்தப் பாடலில் உள்ள சவுக்கு, மா, தென்னை, பனை, வேங்கை உள்ளிட்ட அனைத்து மரங்களும் நடவு செய்யப்பட்டு, இக்கால சமுதாயத்தினர் பாரதியாரை பற்றி அறிந்து கொள்ளும்  வகையில் பாரதியார் பல்கலைக்கழகத்தோடு இணைந்து செயல்பட்டுள்ளார். இவரது பணிகளை பாராட்டி யோகநாதனுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2008 ஆம் ஆண்டில் ’பசுமை போராளி’ விருதினை, அப்போதைய துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி வழங்கி கெளரவித்தார். மேலும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது, பெரியார் விருது, டிம்பர் லேண்டின் மர மனிதன் விருது, மத்திய நீர்வளத்துறை காலநிலை போர்வீரர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 2015ல் சிபிஎஸ்சி ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இவரைப்பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இதனிடையே கடந்த மார்ச் மாதம் யோகநாதன் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது ஹீமோ சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தனது மருத்துவ சிகிச்சைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உதவ வேண்டுமென கோரி, கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில், கடன் வாங்கி அறுவை சிகிச்சை செய்து உள்ளதாகவும், பணிக்கு செல்லாமல், வருமானமும் இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறியுள்ள அவர், முதலமைச்சர் மருத்துவ சிகிச்சைக்கு உதவி புரிய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

Join Us on Telegram: https://t.me/abpnaduofficial

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget