பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் ரகளை – பேருந்தை இயக்க முயன்ற பெண்
கோவை, பொள்ளாச்சியில் அரசு பேருந்தை ஓட்ட முயன்ற பெண்ணால் பரபரப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி துணை ஆட்சியரகம் எதிரே புதிய பேருந்து பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்தகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் அமாவாசை என்பதால் ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஹார்ன் அடித்து ரகளை செய்த பெண்
இந்நிலையில் இரவு பேருந்து நிலையத்தில் இருந்து பெண் ஒருவர் திடீரென ஆனைமலைக்கு செல்வதற்கு நின்ற சிறப்பு பேருந்தின் கண்ணாடியில் கல் வீசினார். இதில் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்து பொள்ளாச்சி நகரம் மேற்கு போலீஸ்சார் அங்கு வந்து விசாரித்த போது அந்த பெண் மனநல பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் பேருந்து நிலையத்தில் இருநது அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், பணிக்கு செல்வோர் எக எராளமான பயணிகள் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தனர்.. மேலும் மாசாணி அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக பக்தர்கள் பேருந்துக்காக காத்து இருந்தனர். அப்பொழுது திடீரென அங்கு நின்ற ஒரு அரசு பேருந்துக்குள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஏறிஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்க முயன்றுள்ளார் . மேலும் பேருந்தில் இருநத ஆர்னை விடாமல் ஒலிக்க செய்துள்ளார். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள் கீழே இறக்கி விட்டனர்.
பின்னர், திடீரென பேருந்தின் டயருக்கு அடியில் சென்று படுத்து கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆம்பூலன்ஸில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்





















