
கோவை பாஜக உட்கட்சி தேர்தலில் மோதல் - நெசவாளர் அணி செயலாளரை நையப்புடைத்த மூவர் மீது வழக்கு
கட்சியில் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எந்த பதவிக்கும் போட்டியிடக்கூடாது என தன்னை மிரட்டுவதாகவும், அதற்காக கார்த்திக், முத்துக்குட்டி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார்

கோவையில் பாஜக உட்கட்சி தேர்தலில் போட்டியிடக்கூடாது என அக்கட்சி நிர்வாகியை சக கட்சியினரே தாக்கிய சம்பவம் தொடர்பாக 7 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ராமநாதபுரம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். 48 வயதான இவர், கோவை மாவட்ட பாஜக நெசவாளர் அணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் கடந்த 11 ஆண்டுகளாக ராமநாதபுரம் பகுதியில் ஜெ.பி. போட்டோ ஸ்டுடியோ என்ற கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி ஜெயக்குமார் ஸ்டுடியோவிற்கு பாஜகவை சேர்ந்த கார்த்திக் மற்றும் முத்துக்குட்டி ஆகிய இருவரும் மேலும் சிலருடன் சேர்ந்து சென்றுள்ளனர். அப்போது பாஜக உட்கட்சி தேர்தலில் போட்டியிடக்கூடாது என ஜெயக்குமாரிடம் கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஜெயக்குமாரை கார்த்திக், முத்துக்குட்டி உள்ளிட்டோர் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளில் இழிவாக பேசியதோடு, இரும்பு கம்பினால் தாக்கியதோடு, கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் ஜெயக்குமாருக்கு வயிறு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஜெயக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து ஜெயக்குமார் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தான் பாஜகவில் மாவட்ட நெசவாளர் அணி செயலாளராக இருந்ததாலும், தற்போது கட்சியில் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எந்த பதவிக்கும் போட்டியிடக்கூடாது என தன்னை மிரட்டுவதாகவும், அதற்காக கார்த்திக், முத்துக்குட்டி மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் கார்த்திக், முத்துக்குட்டி உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஜெயக்குமாரை பாஜகவினர் தாக்கும் காட்சிகள் காட்சிகள் ஸ்டூடியோவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக பாஜக நிர்வாகியே அக்கட்சியினரே சராமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

