கோவையில் பி.எப்.ஐ. நிர்வாகி வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை; எதிர்ப்பு தெரிவித்து போராட்டம், தள்ளுமுள்ளு
நாடு முழுவதும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட100 க்கும் மேற்பட்ட இடங்களில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
![கோவையில் பி.எப்.ஐ. நிர்வாகி வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை; எதிர்ப்பு தெரிவித்து போராட்டம், தள்ளுமுள்ளு National Investigation Agency officials raid the house of the executive of Popular front of India in Coimbatore TNN கோவையில் பி.எப்.ஐ. நிர்வாகி வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை; எதிர்ப்பு தெரிவித்து போராட்டம், தள்ளுமுள்ளு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/22/a3b9a4d078fd7eb273c16b4c85dbdf971663818331550188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்திய அவ்வமைப்பினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாடு முழுவதும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட100 க்கும் மேற்பட்ட இடங்களில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு பண பரிமாற்றம் செய்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனைத் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் மாநகர காவல் துறையினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் குவிந்தனர். மேலும் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக இஸ்மாயிலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனிடையே கர்நாடகாவில் இருந்து இன்று அதிகாலை ரயில் மூலம் கோவை வந்த அவ்வமப்புடன் தொடர்புடைய இரண்டு பேரை பிடித்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அருகில் உள்ள காவலர் அருங்காட்சி மையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனையால் கோவையில் பதட்டம் நிலவியது.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள எஸ்டிபிஐ அலுவலகத்தில் கடந்த 13 ம் தேதி வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இந்நிலையில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து பணப்பரிவர்த்னை நடத்தப்பட்டதா என சோதனை நடத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)