மேலும் அறிய

உதயநிதி ஸ்டாலினுக்கு ED பயம் இருப்பதால்தான், பயப்பட மாட்டோம் என கூறியுள்ளார் - நயினார் நாகேந்திரன்

2011 ஆம் வருடம் தேர்தலின் போது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாடியில் ED ரையிடும் கீழே பேச்சுவார்த்தையும் ஓடிக் கொண்டிருந்தது என்றும் விமர்சித்தார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, முன்னாள் அமைச்சரும் நீண்ட கால நண்பருமான பொள்ளாச்சி ஜெயராமனின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்துள்ளேன். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு மதுரையில் அறுபடை வீடு முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான கால்கோள் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளேன். உலகம் முழுவதிலும் இருந்து முருக பக்தர்கள் அதில் கலந்து கொள்கின்றனர். அந்த நிகழ்வில் அறுபடை வீடுகள் அலங்காரம் வைக்கப்பட உள்ளது. விழாவினை இந்து முன்னணியின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். அதில் கலந்து கொண்ட பின்பு திருநெல்வேலி செல்ல உள்ளேன் என்றார். 

உதயநிதி ஸ்டாலினுக்கு ED பயம் இருப்பதால்தான், பயப்பட மாட்டோம் என கூறியுள்ளார் - நயினார் நாகேந்திரன்

டாஸ்மாக் ஊழலைப் பொறுத்தவரை பலமுறை பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் அமலாக்கத்துறை அதை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதில் சம்பந்தப்பட்ட துணை முதல்வரின் நண்பர்களான ரிதீஸ், ஆகாஷ் அவர்களை விசாரித்தால் தெரியும் என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. அவர்கள் லண்டனுக்கு போய்விட்டார்கள் என கூறுகின்றனர். சிலர் இங்கு இருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மோடிக்கும் ED க்கும் பயப்பட மாட்டோம் என கூறினார்கள். ஆனால் 2011 ஆம் வருடம் தேர்தலின் போது கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதற்கு மாடியில் ED ரையிடும் கீழே பேச்சுவார்த்தையும் ஓடிக் கொண்டிருந்தது. அன்றைக்கு EDக்கு பயந்து தான் பேச்சுவார்த்தை முடித்தார்கள் என்பது தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அன்றிலிருந்து இன்று வரை EDக்கு பயம் இருப்பதால் தான் பயப்பட மாட்டோம் என கூறியுள்ளார். ஏன் ரித்தீசும், ஆகாசும் வெளிநாட்டுக்கு பயந்து போக வேண்டிய அவசியம் என்ன. ஊடகங்கள் தான் அதைக் கேட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். யார் ஆட்சி செய்தாலும் எங்களை பொறுத்தவரை அமலாக்கத்துறை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றார். 

ராஜ்யசபா தேர்தல் கூட்டணி பொருத்தவரை நான் தனிப்பட்ட கருத்து சொல்ல முடியாது. தலைமை தான் முடிவு செய்யும். எங்களிடம் இருப்பது நான்கு சீட்டுகள். தலைமை என்ன சொல்லுதோ அதன்படி கேட்போம். நாங்கள் அதிமுகவோடு கூட்டணியில் இருக்கிறோம். அதிமுகவுக்கு ஆதரவு என கூறினால் ஆதரவு தருவோம் என்று கூறினார்.

நகை கடன் விதிமுறைகளைப் பொறுத்தவரை நாங்களும் எங்களது கமிட்டியில் பேசி உள்ளோம். இதுகுறித்து நிதி அமைச்சர் அவர்களுக்கு கருத்துக்களை கூறுவோம். எவ்வளவு இலகுவாக ஆக்க முடியுமோ அதனை வலியுறுத்துவோம் என்றார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு ED பயம் இருப்பதால்தான், பயப்பட மாட்டோம் என கூறியுள்ளார் - நயினார் நாகேந்திரன்

நான் மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் கூறி வருகிறேன். திமுக ஆட்சியால் மக்களுக்கு ஏராளமான சிரமங்கள் உள்ளது. சொத்துவரி பல மடங்கு கூட்டப்பட்டுள்ளது. மின்சார கட்டணம் ஆண்டுதோறும் ஆறு சதவீதம் அதிகரித்து வருகின்றனர். இதனால் தொழிற்சாலைகள் நடத்த முடிவதில்லை. சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு ,கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல் என அனைத்தும் இந்த ஆட்சியில் அளவுக்கு அதிகமாக போய் உள்ளது. சட்டம் ஒழுங்கு காவல்துறையினரால் பராமரிக்க முடியவில்லை. இந்த ஆட்சி மக்களுக்கு விரோதமாக உள்ளது. எனவே எல்லா கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று கூறினார்.

மத்திய அரசு நிதி கொடுக்காததால் எந்த மாணவர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள். ஏற்கனவே நமது முதலமைச்சர் டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு இதுகுறித்து பேசி இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். பிரதமர் அவர்கள் தனியாக கூட சந்தித்து பேசி உள்ளார். இது குறித்து பேசினாரா என்பதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும். ஆண்டுதோறும் கொடுக்க வேண்டிய பணத்தை மத்திய அரசு கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது என்று கூறினார்.

யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி சேர்க்கப்பட்ட விவகாரத்தில், யாராக இருந்தாலும் ஜாதி பெயர் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget