மேலும் அறிய

சிறுவாணி ஆற்றில் தடுப்பணை; நீதிமன்றம் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் கே.என்.நேரு

”சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டப்படுவது தொடர்பாக முதலமைச்சர் கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் செல்ல நீர்வழித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்”

கோவை மாவட்டத்தில் 1010.19 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டப் பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும்  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவங்கி வைத்தனர்.

ஸ்மார்ட் சிட்டி:

முதலில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பந்தய சாலையில் ரூ.40.67 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலைகள் அமைத்தல் பணியை அமைச்சர்கள் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து வ.உ.சி மைதானத்தில் புதிய திட்டப் பணிகள் துவக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பல்வேறு திட்ட பணிகள் துவங்கப்பட்ட நிலையில், குறிப்பாக தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரூ.1.72 கோடி மதிப்பீட்டில் 2 எண்ணிக்கையிலான சாலையில் தேங்கும் மணல் குப்பைகளை அகற்ற செய்யும் வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்குவது, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரூ.7.86 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 105 எண்ணிக்கையிலான இலகுரக வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்குதல், மாநகராட்சி பொது நிதியின்கீழ் ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 100 எண்ணிக்கையிலான பேட்டரி வாகனங்கள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 2023-24 ஆண்டு ரூ.96 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள காசோலை வழங்குதல் போன்ற பணிகள் துவங்கப்பட்டது. அதேபோல வடவள்ளி வீரகேரளம் கவுண்டம்பாளையம் துடியலூர் போன்ற பகுதிகளுக்கு ரூபாய் 860.80 கோடி மதிப்பீட்டில் பாதாளை சாக்கடை திட்டப் பணி அடிக்கல் நாட்டுதல், வெள்ளலூர் பேரூராட்சியில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை திறந்து வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவையில் இன்று 1010.19 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டப்படுவது தொடர்பாக முதலமைச்சர் கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் கோவையில் குடிநீர் பஞ்சம் வரும் என நாங்களும் அந்த இயக்கத்தை சேர்ந்த தோழர்களிடம் சொல்லியுள்ளோம்.

ஆழியார் அணையில் நீர் எடுப்பது தொடர்பான ஒப்பந்தம் தொடர்பாகவும் நீர்வளத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வருகிற பணிகள் அனைத்திற்கும் முதலமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. சிறுவாணி ஆற்றில் தடுப்பணை விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் செல்ல நீர்வழித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Embed widget