மேலும் அறிய

சுதந்திர போராட்ட தியாகிகள் படங்களுடன் ஊர்வலமாக செல்ல முயன்ற மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது

”தமிழ்நாடு அரசின் கொள்கையின் படி தான் இந்த அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் விடுதலை போராட்ட தியாகிகளின் படங்களை தள்ளிவிட்டும், தூக்கி எறிந்தும் காவல் துறையினர் அராஜமாக நடத்து கொண்டனர்.”

டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் உருவங்களை கொண்ட அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. இதனிடையே தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டிக்கும் வகையிலும், விடுதலை போராட்ட தியாகிகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையிலும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வாகன அணிவகுப்பு நடத்த திட்டமிட்டனர். இந்நிகழ்ச்சி அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வே.ஈஸ்வரன் தலைமையில் கோவை சுந்தராபுரம் பகுதியில் நடைபெற இருந்தது.

சுதந்திர போராட்ட தியாகிகள் படங்களுடன் ஊர்வலமாக செல்ல முயன்ற மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது

இதனிடையே கொரோனா தொற்று பரவலை காரணமாக காட்டி, விடுதலை போராட்ட தியாகிகளின் படங்களை வைத்தபடி வாகன அணிவகுப்பு நடத்த காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் காவல் துறையினர் தடையை மீறி சுந்தராபுரம் பகுதியில் வே.ஈஸ்வரன் தலைமையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஒன்று திரண்டனர். அப்போது வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை உள்ளிட்ட விடுதலை போராட்ட தியாகிகளை படங்களை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கதை சேர்ந்த சுமார் 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சுதந்திர போராட்ட தியாகிகள் படங்களுடன் ஊர்வலமாக செல்ல முயன்ற மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது

இது குறித்து பேசிய அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வே. ஈஸ்வரன், “டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விடுதலைப் போராட்ட தியாகிகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் இந்த வாகன அணிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்தோம். தமிழ்நாடு அரசின் கொள்கையின் படி தான் இந்த அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் விடுதலை போராட்ட தியாகிகளின் படங்களை தள்ளிவிட்டும், தூக்கி எறிந்தும் காவல் துறையினர் அராஜமாக நடத்து கொண்டனர்.

சுதந்திர போராட்ட தியாகிகள் படங்களுடன் ஊர்வலமாக செல்ல முயன்ற மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கைது

இதனை வன்மையாக கண்டிக்கிறோம். குடியரசு தினத்தில் விடுதலை போராளிகளின் படங்களை எடுத்துச் செல்ல தடை விதித்தை ஏற்றுக் கொள்ள முடியாது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வாகன அணிவகுப்பு நடத்த திட்டமிட்டு இருந்தோம். கொரோனா காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. அமைச்சர் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் முகவர் கூட்டம் நடைபெற்றது. அதனால் பரவாத கொரோனா தொற்று இந்த அணிவகுப்பினால் பரவுமா? டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகளை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும் என முதலமைச்சர் கூறியிருக்கிறார். அந்த அலங்கார ஊர்திகளுக்கு தடை இல்லாத போது, எங்களது அணிவகுப்பிற்கு தடை விதித்து இருப்பது என்ன நியாயம்?” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன?  என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன? என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Happy Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
ITR Filing Deadline: இன்றே கடைசி நாள்..! குவியும் அபராதங்களும், பறிபோகும் சலுகைகளும் - வருமான வரி கணக்கு தாக்கல்
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன?  என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
SP Vs DSP: எஸ்பி Vs டிஎஸ்பி - வித்தியாசங்கள், அதிகாரங்கள் என்ன? என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
உதயநிதி ஸ்டாலினால் கைவிட்டுப்போன விஜய் பட வாய்ப்பு...புலம்பும் விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேணி
Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Happy Mattu Pongal 2025 Wishes: மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்வோமா.! டாப் 7 வாழ்த்து புகைப்படங்கள்..
Indian Army Day 2025: மக்களே! இந்திய ராணுவம் பற்றி கட்டாயம் நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது இதுதான்
Indian Army Day 2025: மக்களே! இந்திய ராணுவம் பற்றி கட்டாயம் நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது இதுதான்
Pongal 2025: மாட்டு பொங்கல், சரியான நேரம் என்ன? முக்கியத்தும் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடலாம்?
Pongal 2025: மாட்டு பொங்கல், சரியான நேரம் என்ன? முக்கியத்தும் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடலாம்?
தொடர் விடுமுறை... பழனி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை... பழனி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்
Ajith - Vijay: தளபதிக்கு
Ajith - Vijay: தளபதிக்கு "தல" கணமா? கடைசி வரை அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்!
Embed widget