மேலும் அறிய

கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் மூன்றாவது முறையாக விசாரணை..!

கடந்த வாரம் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை காவல் துறையினர் 18 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று மூன்றாவது முறையாக மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடப்பட்டது. இது தொடர்பாக, சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 200 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர்.

கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் மூன்றாவது முறையாக விசாரணை..!

இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதேபோல கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.. ஆறுக்குட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதாரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.

கடந்த சில மாதங்களாக முன்னேற்றம் இல்லாமல் இந்த வழக்கு இருந்து வந்த நிலையில், மீண்டும் சூடுபிடித்துள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது உதவியாளர் நாரயணசாமி, மகன் அசோக்குமார் ஆகியோரை தொடர்ந்து, சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், அவரது சகோதரர் சிபி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. கடந்த வாரம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை காவல் துறையினர் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர். கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் இரண்டு நாட்களில் 18 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் மூன்றாவது முறையாக விசாரணை..!

இதனைத் தொடர்ந்து கடந்த 2 ம் தேதி முன்னாள் எம்.எல்.. ஆறுக்குட்டியின் உதவியாளர் நாரயணசாமியிடம் இரண்டாவது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று மீண்டும் பூங்குன்றனிடம் காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு, போயஸ்கார்டன் என ஜெயலலிதா தங்கி இருக்கும் இடங்களில் ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவைச் யாரெல்லாம் சந்திக்கிறார்கள், எது தொடர்பாக சந்திக்கிறார்கள் என்பதும், யாரைல்லாம் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பதையும் பார்த்துக்கொள்பவராக இருந்தவர் பூங்குன்றன். மூன்றாவது முறையாக பூங்குன்றனிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
K Bhagyaraj: நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
TVK Vijay: திமுக MP, சாராய ஆலை உரிமையாளர் மகனுக்கு தவெகவில் பதவி பார்சல்? CM விஜயின் மாற்றம் இதுவா?
திமுக MP, சாராய ஆலை உரிமையாளர் மகனுக்கு தவெகவில் பதவி பார்சல்? CM விஜயின் மாற்றம் இதுவா?
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!
Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!
K.Bhagyaraj: திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
திரைக்கதை ஜாம்பவான் இயக்குனர் கே. பாக்யராஜ் காலமானார் - காரணம் என்ன? குவியும் இரங்கல்கள்
Embed widget