மேலும் அறிய

கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவல் எதிரொலி ; தமிழக எல்லைகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு..

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 85 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கை, பாதம், வாய் நோய் என்பதை கேரளாவில் தக்காளி காய்ச்சல் என அழைக்கின்றனர். இந்த கை, பாதம், வாய் நோய் குறிப்பாக காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ 16 என்ற வைரஸால் ஏற்படுகிறது. இது மிதமான பாதிப்பையே ஏற்படுத்தும். தோலில் சிவப்பு தடிப்புகள் தோன்றுவதால் இதற்கு தக்காளி காய்ச்சல் என்று பெயர் வைத்துள்ளனர். கேரளாவில்  தக்காளி காய்ச்சலால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், தொண்டை எரிச்சல், தொண்டை, வாய் மற்றும் நாக்கில் புண், தலைவலி, கை, கால், முதுகுக்கு கீழ் மற்றும் பாதங்களில் கொப்பளங்கள் தோன்றுதல், பசியின்மை, தோலில் அரிப்பு, பின்னர் அங்கு சிவப்பு நிறத்தில் தட்டையாக மாறுதல், சில நேரங்களில் கொப்புளங்களாகவும் மாறுதல் ஆகியவை தக்காளி காய்ச்சலின் அறிகுறிகளாக உள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 85 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவல் எதிரொலி ; தமிழக எல்லைகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு..

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தக்காளி காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள்  கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளா மாநிலத்தின் முக்கிய நுழைவாயிலான வாளையாறு பகுதியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர்.  அரசு பேருந்து மற்றும் கார்களில் வருகின்ற  குழந்தைகளுக்கு கைகளில்  கொப்பளம், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள்  இருக்கிறதா என பரிசோதித்து வருகின்றனர். பரிசோதனைக்கு பின்னரே கேரள பயணிகள் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

வாளையார் சோதனைச் சாவடியில் பயணிகளுக்கு, காய்ச்சல் அறிகுறி தென்படுகிறதா என்பதை பரிசோதிக்க இரண்டு சுகாதார ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் 5 வயதிற்கு உட்பட்ட  குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பதை அறிய 24 பேர் அடங்கிய குழுவினர் சோதனை செய்து வருகின்றனர். இதேபோல மற்ற எல்லையோர பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவல் எதிரொலி ; தமிழக எல்லைகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு..

இது குறித்து வருவாய் ஆய்வாளர் ஆனந்தராஜ் கூறுகையில், “கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்களை சோதனை செய்து வருகிறோம். 5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பரவி வருவதாலும், கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும் இந்த சோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் அறிகுறி தென்படுகிறதா என்பது குறித்து சோதனை செய்யப்படுகிறது. தற்போது வரை நடந்த சோதனையில் எந்த குழந்தைக்கும் அறிகுறி இல்லை. ஒருவேளை அறிகுறி கண்டறியப்பட்டால் அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்போம். அதேபோல பயணிகள் முகக்கவசம் அணியவும், தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தி வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
Breaking News LIVE: தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Thiruppavai Paadal 1:
Thiruppavai Paadal 1: "கண்ணனை பார்த்து..பார்த்து, தாயின் கண்களே அழகாகிவிட்டது" போற்றி பாடும் ஆண்டாள்!
Bumrah: கதறிய கங்காரு பாய்ஸ்! பும்ரா எனும் புயல் படைத்த புது சாதனை - காலையிலே ஹாப்பி
Bumrah: கதறிய கங்காரு பாய்ஸ்! பும்ரா எனும் புயல் படைத்த புது சாதனை - காலையிலே ஹாப்பி
Embed widget