"குதிரையில் வந்த வேட்புமனு தாக்கல்" - பண அரசியலுக்கு எதிராக களம் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்
பணநாயகத்துக்கு எதிராக குதிரையில் களம் இறங்கிய வேட்பாளர். கோவையில் வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் சூழல் வழக்கத்தை விட வித்தியாசமாக மாறியுள்ளது என்று தான் சொல்லவேண்டும். அரசியல் கட்சிகள் வாகன ஊர்வலங்கள், விளம்பர வாகனங்கள் போன்றவற்றை பயன்படுத்தும் நிலையில், சுயேச்சை வேட்பாளர் சூர்யா என்பவர் குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
திராவிட கட்சிகளை சவால் செய்த சுயேச்சை வேட்பாளர்
இந்து மக்கள் கட்சியின் ஆதரவுடன் போட்டியிடும் சூர்யா, இந்த தேர்தலை சாதாரண அரசியல் போட்டியாக அல்லாது, “ஜனநாயகப் போராட்டம்” என தெரிவிக்கிறார். தற்போதைய அரசியல் சூழலில் பணம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது ஒரு வழக்கமான நடைமுறையாக மாறி, ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகள் பாதிக்கப்படுகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் நிலவும் அரசியல் சூழ்நிலையை எடுத்துக்காட்டிய அவர், திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும், ஊழல் மற்றும் பணப் பரிமாற்றம் குறையவில்லை என்று தெரிவித்தார். எங்களிடம் பணம் இல்லை; மக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது” என்று கூறிய சூர்யா, வாக்காளர்கள் பணத்தை ஏற்றுக் கொண்டாலும், வாக்களிக்கும் போது மனச்சாட்சி படி முடிவு எடுக்க வேண்டும் என்ற அவரது வேண்டுகோள், தற்போதைய தேர்தல் கலாச்சாரத்திற்கு எதிரான ஒரு சவாலாகும்.
நொய்யல் நதியை இணைக்கும் திட்டம் போன்றவை நீண்ட காலமாக நிறைவேறாமல் இருப்பதையும், அதிகாரிகளை அணுகுவதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியிருப்பதையும் அவர் சூர்யா சுட்டிகாட்டினார். இதனை மாற்றி, மக்களோடு நேரடியாக இணைந்து பணியாற்றும் அரசியல் தேவை என அவர் வலியுறுத்தினார்.
சாமானிய மனிதர்கள் அரசியல் களத்தில் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிப்பதே தனது இலக்கு என்று உறுதியுடன் சூர்யா தெரிவித்தார்.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















