மேலும் அறிய

Actor Vijay: ‘நடிகர் விஜய் சினிமாவில் இருப்பதால், அரசியலில் வெற்றி பெறலாம் என சொல்ல முடியாது’ - ஹெச்.ராஜா

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் சினிமாவில் இருப்பதனால் அரசியலில் வெற்றி பெறலாம் என சொல்ல முடியாது. அரசியலில் சிவாஜி, டி.ராஜேந்திரன், பாக்யராஜ் ஆகியோரால் வெற்றிப்பெற முடியவில்லை”

கோவை ராம் நகர் பகுதியில் பாஜகவின் மூத்த உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச். ராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சி நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஜனநாயக விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜியை ஜெயிலில் வைப்பேன் என தெரிவித்த ஸ்டாலின் இப்போது வருத்தப்படுகிறார். அவர் மகிழ்ச்சியாக தான் இருக்க வேண்டும். செந்தில் பாலாஜியும், அவரது தம்பியும் கரூரை கைக்குள் வைத்திருந்தனர். 

எமர்ஜென்சி காலத்தில் ஒன்றரை வருஷத்திற்கு கட்சி வேட்டி கட்டாதவர்கள் திமுகவினர். சட்டத்திற்குட்பட்ட ஆட்சி நடக்கவில்லை. ஸ்டாலினுக்கு எச்சரிக்கையாக ஆலோசனையாக சொல்கிறேன். பாஜகவை சீண்ட வேண்டாம் சீண்டினால், அதற்கான பலன் அனுபவித்துக் கொண்டிருக்கிறது அதிகமாகும். ஆளுநர் நினைத்தால் அமைச்சரை நீக்கலாம் என சட்டம் உள்ளது.  பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் சொன்னதில் என்ன தவறு? அவர் சொன்ன சம்பவம் உண்மை தான். திருமாவளவன் தீய சக்தி. டிஜிபிக்கு சட்டப்படி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை, எஜமான் சொல்வதைக் கேட்கிறார். டி.ஜி.பி., செய்தது அராஜகமான செயல். திமுக அழிவின் ஆரம்பம்.

சிறைக்கு சென்றதில் செந்தில் பாலாஜி முதல் நபர். திமுகவில் ஊழல் செய்த அத்தனை பேரும் சிறைக்கு போவார்கள். இன்னும் எத்தனை நாட்கள் இந்த ஆட்சி ஓடும் என உறுதியளிக்க முடியாது. மோசமான சூழல் தமிழகத்தில் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை நேரில் பார்த்த முதல்வர் வெட்கப்பட வேண்டும். மோசமான ஆட்சி. மக்கள் இந்த ஆட்சி முடிவுக்கு கொண்டு வருவது தமிழகத்திற்கு நல்லது. குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு உள்ளது. மத்திய அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளது, கர்நாடகாவில் பாஜகவை சேர்ந்தவர்களும் இந்த அமைப்புகளின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய முடிகிறது.

டாஸ்மாக்கில் நடக்கும் ரூ.10 கூடுதலாக வாங்குவது நிரூபிக்கப்பட்டது. ஊழல் நடைபெறுகிறது என நிரூபித்து ஊடகங்களுக்கு நன்றி. சபரீசன் ஏன் செல்ல வேண்டும்? என்ன தொடர்பு? புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பட்டியலிட்டு சொல்கிறார். தங்களுடனான தொடர்பை சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் செந்தில் பாலாஜியை பார்பதற்கு இரவோடு இரவாக ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் ஓடுகிறார்கள். அரசியல் தொடர்பு இல்லாத சபரீசன் பார்த்ததற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டும்? இந்த ஒவ்வொரு விஷயமும் மக்களிடம் பாஜக சொல்லும். 2018ல் ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின் பகிரங்கமாக செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்புவோம் என சொன்ன சபத்தத்தை தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. வாயாலும், செயலாலும் அமைதியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் தக்க எதிர் விளைவுகள் வரும்”எனத் தெரிவித்தார்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, ”அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் சினிமாவில் இருப்பதனால் அரசியலில் வெற்றி பெறலாம் என சொல்ல முடியாது. நடிப்பிற்கு சிவாஜியை போல் பிறந்து வர வேண்டும். ஆனால் அரசியலில் சிவாஜியால் வெற்றிப்பெற முடியவில்லை. டி.ராஜேந்திரன், பாக்கியராஜ் ஆகியோரால் வெற்றிப்பெற முடியவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நீண்ட நாட்கள் அரசியலில் இருந்தவர்கள். விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம். ஈ.வெ.ரா. ஒழுக்கமில்லாதவர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள். கண்ணதாசன் எழுதிய வனவாசம் ஆகிய புத்தகங்களை மாணவர்களுக்கு முழுவதுமாக கட்டாயமாக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பெண்களை போதைப்பொருளாக, காசுக்கு விலைப்பேசி விற்ற கூட்டம் திராவிட இயக்கங்கள். அமித்ஷா பேசியதை யாரும் முழுவதுமாக தெரிந்துக்கொண்டு பேச மறுக்கிறோம். நம் மன்னர்கள் சோழர்களை பற்றி பேச மறுத்து அன்னியர்களுக்கு மட்டும் இடம் கொடுக்கிறோம். நாம் நம்மை சுருக்கி கொண்டோம். பிரதமர் அளவிற்கு வருவதற்கு முடியாமல் போனது. தேசிய அளவில் நாம் வர வேண்டும் என்று அவர் சொன்னது”எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget