’பத்து ஆண்டுகள் பணிபுரிந்த வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தரம்’ - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்
"வனத் துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கான நிரந்தர நியமன பணி ஆணை வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது"- அமைச்சர் ராமச்சந்திரன்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 21 பயனளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் மாவட்ட தொழில் மையம், மாற்றுத் திறனாளிகள் துறை, சமூக நலத் துறை, வேளாண் துறை மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 35,57,000 ரூபாய்கான காசோலைகளை 21 பயனளிகளுக்கு வழங்கினார். பின்னர் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்ட தீவிர முயற்சின் காரணமாக, கொரோனா தொற்று வெகுவாக கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உச்ச நிலையில் இருந்த போது, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதின் காரணமாக வெகுவாக கட்டுப்படுத்தபட்டுள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 200 பேருக்கும் கீழ் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் உள்ளது.
அனைத்துத் துறைகளிலும் முதலமைச்சர் மிகச் சிறந்த பணியை செய்து வருகிறார். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் வாயிலாக பல லட்சம் பேர் பலன் அடைந்துள்ளனர். ரத்தக் கொதிப்பு, சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளானவர்கள் அதிகளவில் பலனடைந்துள்ளனர். முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி கொண்டு வந்த வருமுன் காப்போம் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்த திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 1500 முகாம்கள் நடத்தப்படும். எல்லாப் பகுதிகளிலுமே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடத்தும். வட கிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்பாக அனைத்து பாதுகாப்பான முன்னேற்பாடுகளும் நடவடிக்கைகள் எடுக்கபட்டு உள்ளது.
வனத் துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கான நிரந்தர நியமன பணி ஆணை வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது. வனத் துறைக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசின் நிதியை பெறாமல் விட்டு விட்டதாகவும், தற்போது திமுக தலைமையிலான அரசு ஒன்றிய அரசிடம் பசுமை திட்டம் மூலம் 2 ஆயிரம் கோடி நிதி வழங்கிட கேட்டுள்ளோம். வன விலங்குளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பிற்கான இழப்பீட்டு தொகை ஒன்றரை மாத்த்தில் வழங்கப்படும். வன விலங்குளால் இனி மேல் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அகழி அமைப்பது, சோலார் வேலி அமைப்பது குறித்து வன அதிகாரிகளிடம் எவ்வளவு தூரத்திற்கு அமைக்க வேண்டும் என்பது குறித்த கணக்கு கேட்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
H.Raja On CM Stalin : கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர்.. ட்விட்டர் ஸ்பேசஸில் பேசிய ஹெச்.ராஜா..