மேலும் அறிய

நீலகிரி: மக்களை அச்சுறுத்தும் பி.எம். 2 யானையை பிடிக்க வனத்துறை உத்தரவு

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் மக்களை அச்சுறுத்தி வரும் பி.எம். 2 என்ற யானையை பிடிக்க தலைமை முதன்மை வனபாதுகாவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி (60). கடந்த 19ம் தேதி இரவு காட்டு யானை ஒன்று அவரது வீட்டை சேதப்படுத்தியதோடு, பாப்பாத்தியை தாக்கி கொன்றது.  உறவினர்கள் இருவர் காயங்களுடன் தப்பினர். உடற்கூராய்விற்காக காவல் துறையினர் உடலை எடுக்க முயன்ற போது, இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை, உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். வருவாய் துறை மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய  பின், உடலை உடற்கூராய்விற்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே யானையை பிடிக்க வனத்துறை உத்தரவு பிறப்பிக்கும் வரை பாப்பாத்தி உடலை வாங்க மாட்டோம் என, உறவினர்கள் தெரிவித்ததால் மூன்று நாட்கள் ஆகியும் உடல் ஊட்டி அரசு மருத்துவமனையில் உள்ளது.  

நீலகிரி: மக்களை அச்சுறுத்தும் பி.எம். 2 யானையை பிடிக்க வனத்துறை உத்தரவு

இந்நிலையில் கூடலூர் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் யானையை பிடிக்க வனத்துறை உத்தரவு நகலைப் பெற, ஊட்டி வனத்துறை அலுவலகத்திற்கு வந்தார். உத்தரவு நகல் இன்னும் வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் அம்ரித், ஆர்.டி.ஓ., துரைசாமி உள்ளிட்ட வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்த பின், ஒரு மணி நேரத்திற்கு பின் போராட்டத்தை கைவிட்டார். 

நீலகிரி: மக்களை அச்சுறுத்தும் பி.எம். 2 யானையை பிடிக்க வனத்துறை உத்தரவு

இதுகுறித்து ஆட்சியர் அம்ரித் கூறுகையில், ”கூடலூர் தேவாலா பகுதியில் யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில் பி.எம். 2 என்ற யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது”  என்றார்.  எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் கூறுகையில், ”பந்தலூர், தேவாலா  பகுதியில் பி.எம். 2 யானை கடந்த ஓராண்டில், 45 வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. யானையை பிடித்து வேறு பகுதிக்கு விட வேண்டும் என, ஓராண்டாக கோரிக்கை விடுத்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் யானையை பிடிக்கவில்லை என்றால் ஆட்கொல்லியாக உருமாறி மக்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்படுவதால், அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 

நீலகிரி: மக்களை அச்சுறுத்தும் பி.எம். 2 யானையை பிடிக்க வனத்துறை உத்தரவு

இதற்கிடையே முதன்மை தலைமை வன பாதுகாவலர் அலுவலகத்திலிருந்து யானையை பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் தலைமையில் இந்த குழு பந்தலூர் பி.எம். 2 என்ற யானையை கூடலூர் வன கோட்டம் சார்பில் கும்கி யானைகளை பயன்படுத்தி மயக்க ஊசி செலுத்தி,  1972  வன விலங்கு சட்டத்தின் கீழ் பாகம்  11 ( 1 ) கீழ், உரிய சட்ட விதிகள் படி இந்த யானையை பிடிக்க வேண்டும். மேலும், யானையின்  உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்த பின், அனுபவம் வாய்ந்த வன கால்நடை மருத்துவர் குழு  உதவியோடு பிடித்து, 1972 வன விலங்கு சட்டத்தின் கீழ் பாகம் 4,  8-ஏ ன் கீழ் இந்த யானையை பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப் பணியை புகைப்படம், வீடியோ எடுத்து சமர்பிக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget