மேலும் அறிய

‘கொங்கு மண்டலத்தை குறி வைத்து பாஜக காய் நகர்த்துகிறது’ - ஈ.ஆர். ஈஸ்வரன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

"யார் மீது வேண்டுமானாலும் வழக்கு இருக்கலாம், பொறுப்பில் இருப்பவர்கள் கண்டிப்பாக வழக்கு விசாரணைக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். அப்படிப்பட்ட விசாரணைகளை சரியான முறையில் நடத்த வேண்டும்."

கோவையில் கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கடந்த ஓராண்டு காலமாகவே பாஜக அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகளை நடத்தி கொண்டிருக்கிறார்கள். பணிகளை செய்வதிலோ, கட்சியை வளர்த்துவதிலோ, பூத் கமிட்டி அமைப்பதிலோ யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எதிர்கட்சிகளை அங்கு ஆளுங்கட்சியாக உள்ளவர்களை குறிவைத்து, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு அந்தந்த மாநிலத்திலே கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சியிலே தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். 

மேற்குவங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், தெலுங்கானா என பல மாநிலங்களில் பாஜகவின் இந்த செயல்பாடுகள், அடுத்த ஆண்டு தேர்தலை நோக்கி செயல்படுவதை பார்க்க முடிகிறது. அந்த மாநிலங்களில் எல்லாம் வழக்குகள், கைதுகள் என நடந்துள்ளது. தற்போது தமிழகத்திலும் அவ்வேலைகளை ஆரம்பித்துள்ளார்கள். எட்டு ஆண்டுகளுக்கு முன்னாள் போடப்பட்ட வழக்கு திடீரென வேகமெடுத்து இப்போது அதற்கான நடவடிக்கைகளை ஒரே நாளில் தீவிரத்தை காட்டி தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சியை குறிவைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் முறைப்படி அதனை செய்யும் பொழுது யாரும் அதனை எதிர்க்க போவதில்லை. அதனை மீறும் போது தான் அனைவரும் வருத்தப்படுகின்றோம். 

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரப்பதிலோ அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலோ எந்த மாறுபட்ட கருத்தும் இருக்காது. ஆனால் நடத்தப்பட்ட முறைகள் அனைவரும் விரும்பத்தக்கதாக இல்லை. இதுபோன்ற விசாரணை நடவடிக்கைகளை அமலாக்கத்துறை தவிர்க்கலாம். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது அடுத்த ஆண்டு தேர்தலை நோக்கி அவர்கள் பயணிப்பதை உணர முடிகிறது. நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் தயாராவதற்கான அவசியம் உள்ளது. இப்படிப்பட்ட நடைமுறைகள் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்கு வாய்ப்புகள் இருக்கும். அப்படிப்பட்ட நிலைமையும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படும். 

யார் மீது வேண்டுமானாலும் வழக்கு இருக்கலாம், பொறுப்பில் இருப்பவர்கள் கண்டிப்பாக வழக்கு விசாரணைக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். அப்படிப்பட்ட விசாரணைகளை சரியான முறையில் நடத்த வேண்டும். இது போன்ற நடவடிக்கையால் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான் என்னைப் போன்றவர்களின் வருத்தமாக உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது இவ்வளவு தீவிரமாக ஆக இருப்பதற்கான காரணம் என்ன? கொங்கு மண்டலத்தில் அவர் பொறுப்பு எடுத்துக் கொண்ட பின்னால் இந்த பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் முழுமையான வெற்றியை பெற்றுள்ளது. அதற்கு அவர் தான் காரணம் என்பதும் அனைவருக்கும் தெரியும். எனவே அதனை நோக்கமாகக் கொண்டு பாஜக கொங்கு மண்டலத்தை குறி வைத்து இப்படிப்பட்ட விஷயங்களில் காய் நகர்த்துகிறார்களா? என்ற ஐயமும் யாருக்கும் வராமல் இல்லை” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிரிழப்பு - ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி பலி என தகவல்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிரிழப்பு - ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி பலி என தகவல்
Breaking News LIVE: ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிரிழப்பு - ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி பலி என தகவல்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிரிழப்பு - ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி பலி என தகவல்
Breaking News LIVE: ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget