மேலும் அறிய

’தலிபான்களின் கருத்துதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்து’ - துரை வைகோ குற்றச்சாட்டு

"ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்கள் படிக்கக்கூடாது, மாற்று கருத்து சொன்னால் கழுத்தை அறுப்பேன் என சொல்கிறார்கள். அதே கருத்துதான் ஆர்.எஸ்.எஸ். கருத்து. இதுதான் சனாதனம்"

மதிமுக சார்பில் வருகின்ற செப்டம்பர் 15 ம் தேதி மதுரையில் அண்ணா பிறந்த நாள் மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான மதிமுகவின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம் கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ”சனாதனம் கலாச்சாரம் வேறு, இந்து மதம் என்பது வேறு. திராவிடர்களும், திராவிட இயக்கங்களும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. இந்து மதம் என்பது வாழ்வியல் முறை. அதில் சிலர் திரித்து மக்களிடம் பிரிவினை உருவாக்கும் வகையில் சாதிகளை உருவாக்கினார்கள். பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் போராடியது இந்து மதத்திற்கு எதிராக அல்ல. வட நாட்டில் 48 மணி நேரமாக உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து, திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள் இந்துகளுக்கு எதிரி போல சித்தரித்து வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வருவதால் மத்திய அரசின் குறைகளை மறைக்கவும், திசை திருப்பவும் இதை செய்கிறார்கள். எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்திருப்பதால், மத ரீதியாக காழ்ப்புணர்ச்சியை உருவாக்க பார்க்கிறார்கள்.

அன்பே சிவம் என்பது தான் இந்து மதம். அயோத்தியில் உள்ள ஒரு சாமியார் உதயநிதி கழுத்தை சீவுவேன் என தலிபான் போல சொல்கிறார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்கள் படிக்க கூடாது, மாற்று கருத்து சொன்னால் கழுத்தை அறுப்பேன் என சொல்கிறார்கள். அதே கருத்துதான் ஆர்.எஸ்.எஸ். கருத்து. இதுதான் சனாதனம். மதம், சாதி வைத்து அரசியல் செய்யக்கூடாது. விவாதம் இருக்கலாம். ஆனால் வன்முறை இருக்க கூடாது. உதயநிதி பேச்சை திரித்து இந்து மதத்திற்கும், இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் திமுக, இந்தியா கூட்டணியினர் எதிரானவர்கள் என்ற கருத்தை உருவாக்க பார்க்கிறார்கள். இந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்க மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்கள்.


’தலிபான்களின் கருத்துதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்து’ - துரை வைகோ குற்றச்சாட்டு

அரசியலமைப்பு சட்டத்தில் பாரத் என்ற பெயர் வருவதற்கு முன்பே இந்தியா என்ற பெயர்தான் வந்தது. நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும்போது பெயர் மாற்றம்  இப்போது தேவையா? இது தேவையில்லாத சர்ச்சை. திமுக ஆட்சி குறித்து எங்களுக்கு எந்த குறைபாடும் தெரியவில்லை. எதிர்கட்சி தலைவர் என்பதால் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சி மீது குறை சொல்லியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியப்படாது. பல தேர்தல்களில் பெரும்பான்மை பலம் வருவதில்லை. அதனால் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். இந்தியா கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க இதை கொண்டு வருகிறார்கள். மின் கட்டண உயர்விற்கு மாநில அரசுகள் காரணம் அல்ல. மத்திய அரசுதான் காரணம். பாஜக ஆளும் மாநிலங்களில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் அடித்தளம். ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பே இந்தியா என்ற பெயர் வந்து விட்டது. ஆர்.பி.ஐ, பி.சி.சி.ஐ பெயர்களையும் மாற்றுவார்களா? இது தேவையில்லாத குழப்பம்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க : Bharat Row: மீண்டும் பணமதிப்பிழப்பு? பறிபோகும் அடையாளம்? இந்தியா பெயரை மாற்றினால் என்னவெல்லாம் நடக்கும்?

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
Embed widget