மேலும் அறிய

DGP: தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை குற்றங்கள் குறைந்துள்ளது - டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது. கடந்த வருடத்ததில் அக்டோபர் மாதம் 1597 கொலை குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு 1368 கொலை குற்றங்கள் நடந்த நிலையில் 15% கொலை குற்றங்கள் குறைந்துள்ளது.

கோவைக்கு வருகை தந்த டிஜிபி சைலேந்திரபாபு, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் கோவை மாநகர காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அவர், பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் சன்மானம் வழங்கி பாராட்டினார். 

இதனைத்தொடந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சைலேந்திரபாபு கூறியதாவது, 

“கோவை மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க 15 காவல் நிலையங்கள் உள்ள நிலையில், முதல்வர் உத்தரவின்படி கோவை மாநகரில் சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் 3 புதிய காவல் நிலையங்கள் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் கூடுதல் காவல் துறையினர் பணியமர்த்தப்படுவார்கள். தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது. கடந்த வருடத்ததில் அக்டோபர் மாதம் 1597 கொலை குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு 1368 கொலை குற்றங்கள் நடந்த நிலையில் 15% கொலை குற்றங்கள் குறைந்துள்ளது. அதேபோன்று ஆதாயக் கொலைகள் 89 லிருந்து 79 ஆக குறைந்துள்ளது. கொள்ளை வழக்குகள் 111 லிருந்து 96 ஆக குறைந்துள்ளது. இதில் பெரும்பாலான குற்றங்களை காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி  கண்டறிந்துள்ளனர்.

DGP: தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை குற்றங்கள் குறைந்துள்ளது -  டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

மென்பொருள் வசதி:

இதேபோன்று சென்னை உள்பட அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்கள் என தமிழகம் முழுவதும் அதிகபடியான சிசிடிவி கேமராக்கள் அரசின் செலவிலேயே பொருத்தபட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் வேலூர், தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிக சிசிவிடி கேமிராக்கள் பொருத்தபட்டுள்ளன. காவல் துறையில் பெரிய பெரிய குற்றங்களை கண்டறிய சிசிடிவி கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 75 ஆயிரம் பேரின் பழைய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் காவல்துறை வசம் உள்ளது. ஒரு புகைப்படம் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் மென்பொருள் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநிலம் கடந்து குற்ற சம்பவங்கள் செய்பவர்களை கண்காணித்து வருகிறோம். தமிழக எல்லைகளில் செக்போஸ்ட் அமைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்துபவர்களை கண்காணித்து கைது செய்யப்பட்டு வருகின்ரனர். கேரளாவிலிருந்து வரும் பயோ மெடிக்கல் வேஸ்ட் தமிழகத்தில் கொட்டுவதை தடுக்க தென்காசி, பொள்ளாச்சி, கன்னியாகுமரி உள்பட 6 இடங்களில் செக் போஸ்ட் அமைத்து கண்காணித்து வருகிறோம். வெளி மாநில வாகனங்களை கண்காணிக்க முதல்வரின் உத்தரவுப்படி சுங்கச்சாவடிகளில் நவீன கேமராக்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

DGP: தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை குற்றங்கள் குறைந்துள்ளது -  டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

இணைய வழி குற்றங்கள்:

இன்றைக்கு இருக்ககூடிய ட்ரெண்டிங் இணையவழி குற்றங்கள் தான். அதை வெளிப்படையாகவே கூறலாம். கடந்த நவம்பர் மாதம் வரை 45 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளது. வெளி நாட்டில் இருக்கும் நபர்,  டி.ஜிபி பெயரை கூறியே 7.5 இலட்சம் ஏமாற்றிய்யுள்ளார். மின் பயனீட்டாளர் எண்ணில் ஆதார் எண்ணை இணைத்து தருவதாக கூறி  சொல்லி படித்த அதிகாரியையே ஏமாற்றியுள்ளனர்.

நெட் பேங்கிங் வேலை செய்ய வேண்டுமென்றால் பேன் கார்டு இணைக்க சொல்லி ஏமாற்றுதல், வெளிநாட்டில் வேலை செய்வதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பெண்கள் பலர் பணத்தை இழந்துள்ளதனர். லோன் கொடுப்பது போன்று ஏமாற்றுதல், போட்டா மார்பிங் செய்து அதிக வட்டியில் பணத்தை கட்ட சொல்லி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் புகைப்படம் அனுப்பும் குற்றம் நடைபெறுகிறது. ஆன்லைன் சூதாட்டில் ஆசைகாட்டி பணத்தை ஏமாற்று உள்ளிட்டவை குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இணைய வழி வழக்கில் கைது செய்து விடலாம். நாடு விட்டு பணம் சென்றால் அதை மீட்பது எளிதல்ல” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget