உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் குழு கரூர் வருகை
’’உடல் ஆரோக்கியத்திற்கும் வலியுறுத்தி சேலம்-கன்னியாகுமரிக்கு 485 கிலோமீட்டர் தூர சைக்கிள் பயணத்தை 4 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டுள்ளோம்’’
திரிடி பெடல் சைக்கிள் அகாடமி சார்பாக ஆண்டுதோறும் உடல் ஆரோக்கியத்திற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நீண்ட தூர சைக்கிள் பயணத்தை ஆண்டுதோறும் தவறாமல் நடத்துவதை இந்த குழு வழக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுசூழல் தூய்மையை வலியுறுத்தி சேலத்தில் இருந்து கன்னியாகுமரி வரை தங்களது அகாடமி நிர்வாகிகளுடன் சைக்கிள் பயணத்தை அதன் அகாடமி ஒருங்கிணைப்பாளர் ரஜினி ராஜன் தலைமையில் மேற்கொண்டுள்ளனர். இந்த சைக்கிள் பயணம் சேலத்திலிருந்து காலை தொடங்கப்பட்டு பின்னர் கரூர் வந்தடைந்தது.
தனது சைக்கிள் பயணம் குறித்து சைக்களில் அகாடமியின் ஒருங்கிணைப்பாளர் ரஜினி ராஜன் கூறும்போது:-
நாங்கள் சேலத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உடல் ஆரோக்கியத்திற்கும் மாசு கட்டுப்பாட்டை தடுக்கும் விதமாக எங்களது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறோம். தற்போது பொதுமக்களிடையே சைக்கிள் ஓட்டும் பழக்கம் முற்றிலும் குறைந்து வருகிறது. சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை ஊக்குவிக்க வலியுறுத்தி 485 கிலோமீட்டர் தூரம் 4 பேர் கொண்ட குழுவினர் பயணம் செய்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இதில் தற்போது 185 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு இருக்கிறோம். பொதுமக்கள் சைக்கிள் ஓட்டுவதால் நீரழிவு போன்ற நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என பல்வேறு மருத்துவர்கள் கூறி வந்தாலும், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் சைக்கிள் ஓட்டுவது கிடையாது.
எனினும் கிராமத்து முதியவர்கள் இதுவரை சைக்கிள் பயணமே மேற்கொண்டு வருகின்றனர். கிராம வாழ்க்கையில் வசிப்பவர்கள் எதிர்ப்புசக்தி உடையவர்களாக திகழ்வதற்கு இதுவும் ஒரு காரணமாக விளங்குகிறது. அதேபோல் சுற்றுச்சூழலை இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், மாசு கட்டுப்பாட்டை இந்த சைக்கிள் பயணம் குறைக்கிறது. இதனால் நாம் உடல் பருமன் ஆவதையும் உடல் ஆரோக்கியத்தையும் நிரந்தரமாக பேணிக்காக்க இந்த சைக்கிள் பயணம் நிச்சயம் கைகொடுக்கும் என கூறினார். சேலத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணியை கரூர் ரவுண்டானா அருகே அவர்களைப் பாராட்டும் விதமாக ரோட்டரி சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்து, தங்களது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
உடல் ஆரோக்கியத்திற்காக பல்வேறு உணவு பழக்க வழக்கங்களில் நாம் ஈடுபட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே, பாரம்பரிய உணவுகளை நாம் உட்கொள்வதாலும் சைக்கிள் பயணத்தை மேற்கொள்ளும் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐயமில்லை.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )