மேலும் அறிய

"டேய் வலிக்குதுடா.. வலிக்குதுடா!" போதைக்கு அடிமையான இளைஞர்கள் - அலற வைக்கும் வீடியோ !

"டார்க் பகுதியில் செல்போன் லைட் வெளிச்சத்தில் விபரீதம் ; வலி நிவாரண மாத்திரைகளே எமனாகும் அவலம் - சீரழியும் இளைய சமுதாயம் !

கோவை மாநகரில் போதை அரக்கனின் பிடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்குச் சாட்சியாக, இளைஞர்கள் கூட்டாக அமர்ந்து போதை ஊசி செலுத்திக்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

"டேய் வலிக்குதுடா... வலிக்குதுடா" என ஒரு இளைஞன் வலியால் சத்தத்துடன் வெளியாகி உள்ள இந்த வீடியோ, கோவையின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்து உள்ளதோடு பெற்றோர்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அவர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக இளைஞர்கள் தற்போது புதிய மற்றும் விபரீதமான உத்திகளைக் கையில் எடுத்து உள்ளனர். குறிப்பாக, மருந்துக் கடைகளில் கிடைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி, அதைத் தண்ணீரில் கரைத்து, ஊசி மூலம் நேரடியாக நரம்புகளில் ஏற்றிக்கொள்ளும் ‘கொடூர’ பழக்கத்திற்குச் சில இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். 

இத்தகைய போதை ஊசிகள் உடனடியாக மூளையைத் தாக்கி போதையை ஏற்றினாலும், ரத்த நாளங்களைச் சிதைத்து உயிருக்கே எமன் ஆகிவிடும் வைத்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது வைரலாகி உள்ள வீடியோவில், ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டுப் பகுதியில் அமர்ந்து உள்ள சில இளைஞர்கள், செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒருவருக்கொருவர் ஊசி போட்டுக்கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது. 

 

கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் வாலிபர்களைக் குறிவைத்துத் தங்கும் விடுதிகள் மற்றும் தனி அறைகளில் இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் ரகசியமாக அரங்கேறி வருகின்றன. போலீசார் கல்லூரி தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், போதை மருந்து விநியோகிக்கும் நபர்களை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் யார் ? அவர்களுக்குப் போதை மருந்துகளை விநியோகிக்கும் ‘கும்பல்’ எது ? என்பது குறித்து கோவை மாநகர போலீசார் அதிரடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைய சமுதாயம் இத்தகைய நவீன போதை கலாச்சாரத்தில் இருந்து மீட்கப்படாவிட்டால், வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும் எனச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
Embed widget