மேலும் அறிய

TN Election 2026 Results: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை! எதிர்பார்ப்பின் உச்சத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாடு!

கடந்த 23ம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறுகிறது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே அது எப்போதும் பரபரப்பையும், விறுவிறுப்பையும் உருவாக்குவது வழக்கம். ஆனால், இந்த தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் விறுவிறுப்பையும், பரபரப்பையும் அதிகரித்துள்ளது. 

நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள்:

இந்த தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடக்கிறது. இதனால், ஒட்டுமொத்த தமிழ்நாடும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாறி, மாறி வந்துள்ள சூழலில், இந்த முறை தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆட்சி யாருக்கு?

திமுக - அதிமுக - நாம் தமிழர் - தவெக என நான்கு முனைப்போட்டி நிலவியுள்ளதால் இந்த தேர்தல் ஒவ்வொரு கட்சியினருக்கும் மிகவும் போட்டி வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக பலமிகுந்த கூட்டணியுடன் இந்த தேர்தலை எதிர்கொண்டது. அதிமுக-வும் பாஜக, பாமக, தமாக என வலுவான கூட்டணியுடன் களத்தில் இறங்கியது. நாம் தமிழர் வழக்கம்போல தனித்தே களமிறங்கினர். விஜய்யின் முகத்தை முன்னிறுத்தி 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிட்டுள்ளது.

இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடிப்பதே ஒவ்வொரு கட்சியினருக்கும் சவாலாக அமையும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய அளவில் வாக்கு சதவீதத்தைப் பெறும் என்றே ஒவ்வொரு கருத்துக்கணிப்பிலும் தெரிய வந்துள்ளது.

விஜய் ஏற்படுத்தப்போகும் தாக்கம்:

இந்த தேர்தலில் விஜய் தனித்தே ஆட்சியைப் பிடிப்பாரா? அல்லது அவர் யாருடைய வாக்குகளைப் பிரிப்பதால் யார் ஆட்சிக்கட்டிலில் அமரப்போகிறார்கள்? தனித்தே போட்டியிடும் நாம் தமிழர் வாக்கு வங்கி ஏறப்போகிறதா? வீழப்போகிறதா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணிகளும் மிகப்பெரிய அளவில் மாறும் என்றே தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதனால், இந்த 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்கால தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தமிழக அரசியலின் அடித்தளமாக அமையும் என்றே கருதப்படுகிறது. பாண்டிச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் வெளியானாலும் ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பே தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளையே பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

TN Election: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்து வந்த பாதை! வரலாறு படிங்க மக்களே!

தலைப்பு செய்திகள்

'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Embed widget