கோவை & திருப்பூர்: நாளை மின் தடை! உங்கள் பகுதிகளில் மின்சாரம் இருக்குமா? முக்கிய அறிவிப்பு!
கோவையில் நாளைய தினம் பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சாரமானது நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
கோவையின் பல்வேறு முக்கிய இடங்களில் நாளைய தினம் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இத்தகைய மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். இது தொடர்பான முன்னறிவிப்பை மின் வாரியம் பொதுமக்களுக்கு தவறாமல் வழங்கிவருகிறது. அந்தவகையில் கோவையில் நாளைய தினம் பின்வரும் இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது.
மின் தடை பகுதிகள்: கோயம்புத்தூர் மாவட்டத்தில் கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர் ஆகிய இடங்கள்.மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோல, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பனபாளையம், மகேஸ்வரன் நகர், தாராபுரம் சாலை, சிங்கனூர், கல்லக்கிணறு, பழனி ஆண்டவர் சோலார் ஆகிய இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்வாரிய தரப்பில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இது குறித்த முன்னறிவிப்பையும் மின் வாரியம் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.





















