Coimabatore Power Shutdown: கோவையில் நாளை(06-06-2025) எங்கெல்லாம் பவர் கட்? முழு விவரம் இதோ
Coimabatore Power Shutdown: கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மின்சார பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது

Coimabatore Power Shutdown: மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதந்தோறும் கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் மாதம் ஒரு முறை மின் தடை செய்யப்படுவது வழக்கம். இந்த மின் தடையை செய்து பராமரிப்பு பணிகளை மேற்க்கொண்டு வருகிறது.
பராமரிப்பு:
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம்.
மின் தடை செய்யப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடத்தில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளை மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், கோவையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 4 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சில இடங்களில் இந்த மின் தடையானது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடையானது செய்யப்படும்.
கோவையில் நாளைய மின்தடை: 06-06-2025
கதிர்நாயக்கன்பாளையம்:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி.
கள்ளிமடை
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே.பாளையம், கிருஷ்ணாபுரம், வீட்டு வசதி பிரிவு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்கலிபாளையம், உப்பிலிபாளையம்
மின் தடை செய்யப்படவுள்ளதால் பொதுமக்கள் வீட்டு குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புதல் மற்றும் அத்தியாவசிய தேவை சார்ந்த அனைத்து வேலைகளையும் முன்கூட்டியே செய்து வைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.






















