மேலும் அறிய

Kishore K Swamy : கிஷோர் கே.சுவாமி மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு.. வழக்கு விவரம் இதுதான்..

கலகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே ஆத்திரமூட்டலை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கார் வெடிப்பு தொடர்பாக பேரில் கலகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் டிவிட்டரில் கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே சுவாமி மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையில் முத்து என்பவர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கிஷோர் கே சுவாமி மீது ஒரு புகார் அளித்தார். அதில் கோவை கார் வெடிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததாகவும், அப்போது கிஷோர் கே சுவாமி என்பவரின் டிவிட்டர் பக்கத்தில் ஆட்சேபத்திற்குரிய, ஆபத்து மற்றும் வெறுப்பை உருவாக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டு இருந்தார். இது இரு தரப்பினர் இடையேயான அமைதியை குலைக்கும் வகையில் இருந்ததாகவும், குற்ற நோக்கத்துடன் இரு தரப்பினர் இடையே பகைமை மற்றும் வெறுப்பை உருவாக்கும் வகையில் பதிவிட்டு இருந்ததாகவும் அவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கலகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே ஆத்திரமூட்டலை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வலதுசாரி சிந்தனையாளரான கிஷோர் கே.சுவாமி பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதள பக்கங்களில் எம்பி, எம்எல்ஏ.,கள் மற்றும் தலைவர்கள் பற்றி அவதூறு பேசுவதை வாடிக்கையாக கொண்டவர். கிஷோர் கே சுவாமி சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய நபராகவும் இருந்து வருகிறார்.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை இழிவுபடுத்தி பேசி வருவதாக அவர் மீது புகார்கள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைந்த முதல்வர் கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் மீது கிஷோர் கே சுவாமி சமூக வலைதளங்களிலும், யூ டியூப்பிலும் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றியும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து அவர் மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் 153 கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1) (b) அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், 505(1) (c) ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

குண்டர் தடுப்பு சட்டத்திலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் ஜாமீனில் சிறையில் இருந்து கிஷோர் கே சுவாமி வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கோவை கார் வெடிப்பு தொடர்பாக கலகத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் கருத்து பதிவிட்டதாக கோவை சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget