மேலும் அறிய

பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்திய ஹோட்டல் மேனேஜர் மீது பாய்ந்த வழக்கு - காரணம் என்ன?

அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும், நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கோவை ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் பெட்டியில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிடும் வகையில் ஒரு உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளரும், தொழிலதிபருமான பாபி குத்தகைக்கு எடுத்து ஹோட்டல் தொடங்கியுள்ளார். கடை விளம்பரத்திற்காக, அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும், நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு என்றும், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த கோவை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர்.

உணவகத்தை உரிமையாளர் பாபி செம்மனூர் போட்டியை தொடங்கி வைத்தார் முதல் சுற்றில் 25 பேர் கலந்து கொண்டனர். மேலும் போட்டியில் 400 க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்தப் போட்டியில் அதிக அளவில் பிரியாணி வைக்கப்பட்டதால் பலர் சாப்பிட முடியாமல் திணறினர். இருப்பினும் ஒரு சிலர் இரண்டாவது பிரியாணி முடித்துவிட்டு மூன்றாவது பிரியாணிக்கு சென்றனர். அப்போது சாப்பிட முடியாமல் சிலர் வாந்தி எடுத்ததால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டனர். போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆர்வமாக ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். கோவை மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான இளைஞர்களும் பெண்களும் போட்டியில் பங்கு வருவதற்காக வந்திருந்தனர். மேலும் உணவகத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. மேலும் சாலையோரம் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. வாகன போக்குவரத்து மிகுந்த ரயில் நிலையப் பகுதியில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டதாலும், நோ பார்கிங்க் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

மேலாளர் மீது வழக்குப்பதிவு

இதனிடையே கணேசமூர்த்தி என்ற கால் டாக்சி டிரைவர் தனது மகனின் படிப்பு செலவிற்காக இந்தப் போட்டியில் கலந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், “எனது மகன் பிரவீன் ராஜ்க்கு பிறந்தது முதல் ஆடிசம் பாதிப்பு உள்ளது. பள்ளியில் சேர்த்து படிக்க 19 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அதற்காக தான் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளேன். தூத்துக்குடியில் அனைத்தையும் இழந்து இங்கு வந்துள்ளேன். ஒரு பாலக்காடு டிரைவர் சொன்னதால், இந்த போட்டியில் கலந்து கொண்டு பிரியாணி சாப்பிட்டேன். என் மகனை ஒரு ஆள் உடனிருந்து பார்த்து கொள்ள வேண்டியுள்ளது. அவனது படிப்பிற்கும், மருத்துவ செலவிற்கும் உதவுங்கள்” என கண்ணீர் மல்க தெரிவித்தார். போட்டியின் முடிவில் இரண்டரை பிரியாணிகளை சாப்பிட்ட கணேசமூர்த்தி இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார். இதையடுத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல மூன்று பிரியாணி சாப்பிட்டு முதல் இடம் பிடித்த சதீஷ் என்பவருக்கு ஒரு இலட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில் எவ்வித முன் அனுமதியும் இன்றி பொது இடத்தில் மக்களை கூட்டி போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக உணவகத்தின் மேலாளர் கணேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பந்தய சாலை காவல் நிலையம் ஆய்வாளர் அர்ஜுன் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், உணவகத்தின் மேலாளர் கணேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கு; முதல்வர் ஸ்டாலினிடம் கால அட்டவணை அறிவிக்க திருமா கோரிக்கை!
தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கு; முதல்வர் ஸ்டாலினிடம் கால அட்டவணை அறிவிக்க திருமா கோரிக்கை!
”ராக்கெட் போல் உச்சத்திற்கு சென்ற விலை - குடும்பத் தலைவிகள் வேதனை” இதுதான் காரணமா..?
”ராக்கெட் போல் உச்சத்திற்கு சென்ற விலை - குடும்பத் தலைவிகள் வேதனை” இதுதான் காரணமா..?
Thirumavalavan: “ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு” - முதல்வரை சந்தித்த திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
“ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு” - முதல்வரை சந்தித்த திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SP Varun kumar Anna Award : அரசின் அண்ணா பதக்கம்! அடித்து ஆடும் வருண்குமார்! Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?Nitin Gadkari on Congress : ’’எனக்கு பிரதமர் பதவி’’எதிர்க்கட்சி பக்கா ஸ்கெட்ச்! போட்டுடைத்த  கட்காரிMK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கு; முதல்வர் ஸ்டாலினிடம் கால அட்டவணை அறிவிக்க திருமா கோரிக்கை!
தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கு; முதல்வர் ஸ்டாலினிடம் கால அட்டவணை அறிவிக்க திருமா கோரிக்கை!
”ராக்கெட் போல் உச்சத்திற்கு சென்ற விலை - குடும்பத் தலைவிகள் வேதனை” இதுதான் காரணமா..?
”ராக்கெட் போல் உச்சத்திற்கு சென்ற விலை - குடும்பத் தலைவிகள் வேதனை” இதுதான் காரணமா..?
Thirumavalavan: “ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு” - முதல்வரை சந்தித்த திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
“ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு” - முதல்வரை சந்தித்த திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
Siddharth - Aditirao Marriage: டும் டும் டும்! அதிதி ராவ் ஹைதாரியை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.. குவியும் வாழ்த்துக்கள்
டும் டும் டும்! அதிதி ராவ் ஹைதாரியை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.. குவியும் வாழ்த்துக்கள்
Ranipet Jaguar Mega: ராணிப்பேட்டையில் ஜாகுவார் கார், மெகா காலணி உற்பத்தி ஆலை - 25,000 பேருக்கு வேலை - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
Ranipet Jaguar Mega: ராணிப்பேட்டையில் ஜாகுவார் கார், மெகா காலணி உற்பத்தி ஆலை - 25,000 பேருக்கு வேலை - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
Watch Video: பிரியங்காவுக்கு பல்பு கொடுத்த பிரபல நடிகை நிகிலா! என்னப்பா நடந்துச்சு?
Watch Video: பிரியங்காவுக்கு பல்பு கொடுத்த பிரபல நடிகை நிகிலா! என்னப்பா நடந்துச்சு?
பெண்கள் சுய தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் அரசு மானியம்; பெறுவது எப்படி? தகுதி என்ன?
பெண்கள் சுய தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் அரசு மானியம்; பெறுவது எப்படி? தகுதி என்ன?
Embed widget