மேலும் அறிய

கோவை அருகே பயங்கரம்... பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை

வழக்கறிஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே மயிலேறிபாளையம் பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். 48 வயதான இவர், வழக்கறிஞராக பல ஆண்டுகளாக பணி புரிந்து வந்தார். இரத்தினபுரி பகுதியில் இவரது அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவரது மனைவி நித்தியவள்ளி தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இன்று வழக்கு ஒன்று தொடர்பாக பொள்ளாச்சி வரை செல்வதாக உதயகுமார் தனது மனைவியிடம் கூறிவிட்டு மதியம் கிளம்பியுள்ளார்.

வெட்டி படுகொலை

தனக்கு சொந்தமான காரில் அவர் கிளம்பிய நிலையில், அவருடன் மேலும் சிலரும் அந்த காரில் பயணித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ள மயிலேறிபாளையம் பிரிவு அருகே வந்த போது, நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் அந்த கார் பயணித்துள்ளது. சிறிது தூரத்தில் கோழிப்பண்ணை ஒன்றின் அருகே காரில் இருந்தவர்கள் உதயகுமாரை வெளியே இறக்கி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக அவரை வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உதயகுமார் உயிரிழந்தார். இதன் பின்னர் அவரை படுகொலை செய்த நபர்கள், உதயகுமாரின் காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

6 தனிப்படைகள் அமைப்பு

இது தொடர்பாக அவ்வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிபாளையம் காவல் துறையினர் உதயகுமாரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் ஆய்வு செய்தார். உதயகுமாரின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்வதற்காக 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் கொலைக்காக காரணம் குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர் உதயக்குமார் கொலைக்கு காரணமானவர் விரைந்து கைது செய்ய காவல் துறையிர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை அருகே பட்டப்பகலில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Breaking News LIVE: திமுகவின் பவள விழா : மாநாட்டு திடலை சுற்றி 5000-க்கும் மேற்பட்ட பதாகைகள்
Mohan G :
"விஜய் சார் தப்பான வழியில போறாரு.. வருத்தமா இருக்கு.." : விஜய் பற்றி இயக்குநர் மோகன் ஜி
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
கேரளாவில் குரங்கம்மையா? மீண்டும் க்வாரண்டைனா? அச்சத்தில் பொதுமக்கள்
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Manju Warrier : அழகால் மயக்கும் மஞ்சு வாரியர்...வேட்டையன் கதாபாத்திர அறிமுக வீடியோ
Manju Warrier : அழகால் மயக்கும் மஞ்சு வாரியர்...வேட்டையன் கதாபாத்திர அறிமுக வீடியோ
Embed widget