'இயற்கையை எந்நாளும் காக்கும் அரசாக திமுக அரசு இருக்கும்’ - உதகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
”நீலகிரி பாதுகாப்பு என்பது தமிழகத்தை பாதுகாப்பது. தமிழகத்தின் அழகை, இயற்கையை பாதுகாப்பது. மலைகளுடன் சேர்ந்து கழக அரசு மக்களையும் காக்கும்.”
நீலகிரி மாவட்டம் உதகையில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்குச் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் உதகை தாவரவியல் பூங்கா சாலையில் உதகையை உருவாக்கிய ஜான் சல்லிவனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து உதகை அரசு கலைக் கல்லூரியில் ஊட்டி நகரின் 200-வது ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கும் உதகைக்கு வந்துள்ளேன். இயற்கை எழில் கொஞ்சும் உதகையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. வாழ்க்கையில் எத்தனையோ முறை வந்திருந்தாலும் நீலகிரி வந்திருந்தாலும், முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். ஊட்டியைப் போலவே எனது மனதும் குளிர்ச்சியாக உள்ளது. தமிழகம் பூந்தோட்டம் என்று கலைஞர் கூறுவார். அதில் அழகான நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. யுனஸ்கோ உயிர்க்கோள் காப்பகமாக அமைத்துள்ளது. அந்த இடத்தில் இந்த விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
நீலகிரி மக்கள் தந்த வரவேற்பு என்னை இன்னும் ஆற்ற வேண்டிய பணிகளை ஊக்கப்படுத்தியுள்ளது. இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவடத்தைச் சார்ந்துள்ள ராமச்சந்திரன் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றி உள்ளார். 3 முறை எம்எல்ஏ, 2 ஆவது முறை அமைச்சர். படுகர் இன மக்களின் உள்ளத்தில் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களின் நம்பிக்கையை பெற்றவராக உள்ளார். அவருக்கு வாழ்த்துகள், பாராட்டுகள். அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் பிறந்த ஊர் பெரம்பலூர். புகுந்த ஊர் நீலகிரி மாவட்டம். அவர் பெயர் ராசா, மாவட்டத்துக்கே ராசாவாக உள்ளார். அந்த அளவுக்கு மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்துள்ளார். உங்களின் தேவைகளை அறிந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துச் சொல்லி நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து பணியாற்றி வருகிறார். அவருக்கும் பாராட்டுகள்.
நமது அரசு அமைந்த பிறகு ஓராண்டு காலத்தில் பல்வேறு விழாக்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்கேற்கும் வாய்ப்பு. இந்த மாவட்டத்தில் அடிக்கல் நாட்டு, திறப்பு விழா, 9500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகப்பெரிய அளவில் நடக்கிறது. திமுக அரசு அமையும் போது நீலகிரிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
நாடு திரும்பிய இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை 1970 ம் ஆண்டில் கூடலூர், கோத்தகிரி தாலுகாவில் அமர்த்தி அழகுபார்த்தவர் கலைஞர். அவர்களின் வாழ்வாதாரத்துக்காக தேயிலை தோட்டக் கழகம் ஏற்படுத்தினார். உதகையில் இலவசமாக கட்டிக் கொடுத்தார். 2008 தேயிலை தொழிலாளர் சம்பள உயர்வு 90 ரூ கேட்டனர். 105 வழங்க உத்தரவிட்டார் கலைஞர். தேயிலை விவசாயிகளுக்கு மானியம், பழங்குடி மக்கள் குடியிருப்புக்கு மின் இணைப்பு, இலவச டிவி வழங்கியவர். சாதனையின் தொடர்ச்சியாக பல்வேறு பணிகள் இப்போது. தோள் கொடுப்பான் தோழன் உடனடியாக ஓடி வரும் அரசு. 2009 மழை பாதிப்பு, 2019 நிலச்சரிவு ஆகிய காலங்களில் மக்களுக்கு திமுக உதவி செய்தது. ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்கு பணியாற்றும் இயக்கம் திமுக.
சுற்றுச்சூழல், மேம்பாடு, அரசு சிறப்பான திட்டங்களை, இயற்கையும் மனிதனும் இயைந்து வாழும் மாவட்டத்தில், அரசு திட்டமிட்டுள்ளது. 20.27 சதவீதமாக உள்ள வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நிதிநிலை அறிக்கையில் சொன்னோம். வனப் பரப்பை அதிகரிப்பதுடன் வன விலங்குகளை காப்போம். தெப்பக்காடு யானைகள் முகாம், அதிநவீன யானைகள், சுற்றுச்சூழல் வளாகம், தெப்பக்காடு யானைகள் முகாம் நூற்றாண்டு பழமையானது. ஆசியாவில் முதலில் ஏற்படுத்தப்பட்டது. யானைகள் ஆராய்ச்சி, வளர்ப்பு யானைகளுக்கான சிறப்பு மையம், களைத் தாவரங்களை ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து ஒழிக்க திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழக வனப்பகுதி பாதுகாக்கப்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள நீலகிரி சாஸ்திரி வாழை, கேரட், பீன்ஸ், லெட்யூஸ் போன்றவற்றை உற்பத்தி செய்ய, நறுமணப் பொருள்கள் காப்பி, இஞ்சி, பலா போன்ற பலவகையான காய்கறி, பழங்கள், குறிப்பிடத்தகுந்த, தேயிலை வெளிநாட்டு ஏற்றுமதி, பொருளாதார மேம்பாட்டுக்காக விவசாயிகளின் ஏற்றுமதிக்காக பதப்படுத்தப்பட்ட ஏற்றுமதி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காய்கறி, பழங்கள், பூக்கள், தேயிலை உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்ய மையம், வெளிநாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயற்கை வேளாண்மை செய்ய மையம் அமைக்கப்படும். சுற்றுலாப் பயணிகள் அதிகம், சுற்றுலா சார்ந்த தொழில், சுற்றுலா வழிகாட்டி, சிறு உணவகங்கள் வேலை, வாடகை கார், சிறு வியாபாரிகள் சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். முறையாக கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, அமைப்புசாரா தொழிலாளர் வாரியத்தில் இணைத்து பலன்களை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நீலகிரி பிளாணட்டோரியம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. நீலகிரி பாதுகாப்பு என்பது தமிழகத்தை பாதுகாப்பது. தமிழகத்தின் அழகை, இயற்கையை பாதுகாப்பது. மலைகளுடன் சேர்ந்து கழக அரசு மக்களையும் காக்கும். பல்லுயிர் காக்கும் அரசு, சுற்றுச்சூழலை காக்கும். அனைத்து உயிர்களையும் உள்ளடக்கி, யாரையும் பாதிக்காத அரசு. வாடிய பயிரைக் வல்லளாரின் கொள்கை, திராவிட மாடல் அரசு, சுயமரியாதை, இயற்கை மீது நம்பிக்கை வரும். இயற்கையை எந்நாளும் காக்கும் அரசாக திமுக அரசு இருக்கும்” என அவர் தெரிவித்தார்.