மேலும் அறிய
Advertisement
ரயில் போக்குவரத்தில் மாற்றம் குறித்த தகவல்கள்.. பயணிகள் கவனத்திற்கு..
ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது அது குறித்த விபரங்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சேலம் கோட்டத்தில் ஈரோடு ரயில் நிலையத்தில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 14 வரை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சில ரயில்கள் கரூர், நாமக்கல், சேலம் வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட இருக்கிறது.
ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்றா ரயில் நிலையத்திலிருந்து ஜூலை 28 ஆகஸ்ட் 4, 11 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி விரைவு ரயில் (16788), திருநெல்வேலியில் இருந்து ஜூலை 25 ஆகஸ்ட் 1, 8 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்றா விரைவு ரயில் (16787),
சண்டிகரிலிருந்து ஜூலை 25, 29 ஆகஸ்ட் 1, 5, 8, 12 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (12688), மதுரையில் இருந்து ஜூலை 27, 31 ஆகஸ்ட் 3, 7, 10, 14 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சண்டிகர் விரைவு ரயில் (12687), ஓகாவில் இருந்து ஜூலை 29 ஆகஸ்ட் 5, 12 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரயில் (19568), தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24, 31 ஆகஸ்ட் 7 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஓகா விரைவு ரயில் (19567), கச்சக்குடாவில் இருந்து ஜூலை 30 ஆகஸ்ட் 6, 13 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (17616), இருந்து ஜூலை 31 ஆகஸ்டு 7 14 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில் (17615),
தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 13 வரை புறப்பட வேண்டிய மைசூர் விரைவு ரயில் (16235), மைசூரில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 13 வரை புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரயில் (16236) ஆகியவை ஈரோடு வழியாக செல்வதற்கு பதிலாக கரூர், நாமக்கல், சேலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion