மேலும் அறிய

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தை புரட்டிப் போட்ட சூறைக்காற்று... உயிர் தப்பிய மாணவர்கள்...

கோவை பாரதியார் பல்கலைக்கழக கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்ததால், நாற்காலிகள், மின் விசிறிகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

கோவை, பாரதியார் வளாகத்தில் நேற்று (மே. 15) மாலை பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளிக் காற்றால் பெரும் சேதம் ஏற்பட்டது. வளாகத்தின் பல பகுதிகளில் இருந்த ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால், கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டன.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் தாக்கமாக பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான நுழைவாயில், சுற்றுச்சூழல் அறிவியல் துறை மற்றும் எம்.பி.ஏ துறை கட்டிடம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் பெரிய மரங்கள் சாய்ந்து விழுந்தன. குறிப்பாக எம்.பி.ஏ துறை கட்டிடத்தின் முதல் தளத்தின் மீது ராட்சத மரம் ஒன்று விழுந்ததில், கூரைத் தகடுகள் உடைந்து சேதமடைந்தன. மரக்கிளைகள் கட்டிடத்திற்குள் புகுந்து மண்டபப் பகுதிகளையும் பாதித்தன.

இந்த சம்பவம் மாலை 5 மணிக்குப் பிறகு நடைபெற்றதால், அப்போது மாணவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்ததால் நாற்காலிகள், மின் விசிறிகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும், பல்கலைக்கழக தேர்வுத் துறையில் மாணவர்களின் விடைத்தாள்கள் பாதுகாக்கப்பட்டிருந்த அறையிலும் மழைநீர் கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விடைத்தாள்கள் சேதமடைந்திருக்குமா என்ற அச்சம் மாணவர்களிடையே உருவாகியுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ராஜவேல் தெரிவித்ததாவது: “இன்று காலை முதலே பல்கலைக்கழக வளாகத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்டிட சேதங்கள் மற்றும் தேர்வுத் துறை கசிவுகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget