நூற்றுக்கணக்கான தேனீக்கள் தாக்குதல்… ஆனாலும் தேனை விடாது ருசித்த கில்லாடி கரடி...
மருதமலை முருகன் கோவில் லிப்ட் அருகே, தேனீக்கள் தாக்கியபோதும் பாறைத் தேனை ருசித்த கரடியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை அருகே உள்ள மருதமலை முருகன் கோயில் பகுதியில் கரடி ஒன்று பாறைத் தேனை ருசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள மருதமலை சுவாமி கோவில் பகுதியில் சமீப காலமாக யானை, சிறுத்தை மற்றும் கரசுப்பிரமணியன் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோவிலுக்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளின் வசதிக்காக புதிதாக அமைக்கப்பட்ட லிப்ட் அருகே உள்ள பாறை இடுக்குகளில் மலைத் தேனீக்கள் பெரிய அளவில் கூடு கட்டி இருந்தன.
அந்தப் பகுதியில் வந்த கரடி ஒன்று, தேன் கூட்டின் வாசனையை உணர்ந்து பாறை இடுக்கிற்குள் சென்று தேனை சாப்பிடத் தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான தேனீக்கள் கரடியின் முகம் மற்றும் தலையை சுற்றி தாக்கின. இருப்பினும், தேனீக்களின் தாக்குதலை பொருட்படுத்தாத கரடி, தனது பாதங்களால் தேனீக்களை விரட்டியபடி தொடர்ந்து தேனை ருசித்தது.
நீண்ட நேரம் தேனை சாப்பிட்ட பிறகு, கரடி அங்கிருந்து மெதுவாக இறங்கி அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றது. இந்த காட்சியை அங்கு இருந்த பக்தர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.கோவிலின் ஆச்சரியமாக இருக்கும் லிப்ட் அருகே கரடி உலா வந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனால், அந்தப் பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Before You Go
"வாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு" டெலிவரி ஊழியர் ஆபாச செயல் மஃப்டி லேடி போலீஸ் அதிரடி!
ட்ரெண்டிங் செய்திகள்






















