மேலும் அறிய

‘செந்தில் பாலாஜியை காப்பாற்ற முழு அரசையும் முதலமைச்சர் களமிறக்கியுள்ளார்’ - அண்ணாமலை குற்றச்சாட்டு

எல்லா அமைச்சர்கள் மீதும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில அரசை கேடயமாக பயன்படுத்தி செந்தில் பாலாஜி தப்பிக்க முயற்சிக்கிறார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநர் அமைச்சர் ஒருவரை டிஸ்மிஸ் செய்வதாக அறிக்கை வெளியிட்டார். பின்னர் அதனை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார். அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதற்குள் பாஜக செல்ல விரும்பவில்லை. கருணாநிதி தொடர்ந்த ஒரு வழக்கில் அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது, அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என டிவிட் போட்டார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஸ்டாலின், ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்த பிறகு அதனை எப்படி தவறு என சொல்ல முடியும்?

எல்லா அமைச்சர்கள் மீதும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில அரசை கேடயமாக பயன்படுத்தி செந்தில் பாலாஜி தப்பிக்க முயற்சிக்கிறார். அவர் மீது அடானி ஜெனரல் நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில்பாலாஜி ஊழல்வாதி என்பது முதல்வருக்கு தெரியும். அமைச்சரவையை முதல்வர் சுத்தமாக வைக்க வேண்டும். ஆனால் முதலமைச்சர் வரம்பு மீறி செயல்படுகிறார். முதலமைச்சர் ஏன் செந்தில் பாலாஜியை நீக்காமல் இவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்? ஆளுநரின் முடிவு சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஆளுனர் சார்பாக நாங்கள் பேச முடியாது. ராஜ்பவன் வேறு. பாஜக வேறு. அரசு வேறு. முதலமைச்சர் ஏன் செந்தில் பாலாஜியை பாதுகாக்கிறார்? அவரை நீக்கமாட்டேன் என முதலமைச்சர் ஏன் அடம்பிடிக்கிறார்?

தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள 90% அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. பலருக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. 90 சதவீதம் பேர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். செந்தில் பாலாஜியும் ஒரு மனிதர் தான். தனிப்பட்ட முறையில் அவர் மீது விருப்பு வெறுப்பு இல்லை. அவர் செய்த குற்றத்தின் மீது தான் வெறுப்பு. இது தனிமனித தாக்குதல் கிடையாது. எதுவும் சட்டப்படி இருக்க வேண்டும். தனிமனிதனை காப்பாற்ற முழு அரசையும் முதலமைச்சர் களமிறக்கியுள்ளார். கல்குவாரிகள் வேலைநிறுத்தத்தில் அரசு உடனடியாக தலையீட்டு தீர்வு காண வேண்டும். செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாக உள்ளார்.  அமலாக்கத்துறை விசாரிக்க விடமால் அரசு உதவுகிறது. முதலமைச்சர் செந்தில் பாலாஜிக்காக அரசியல் சாசன சட்டத்திற்கு சவால் விடுகிறார்.

பொட்டு தீக்சர் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் கோவிலை, மாநில அரசு கைப்பற்ற நினைக்கிறது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மீறி அரசாங்கம் செயல்படுகிறது. யாரும் கனகசபை மீது ஏறக்கூடாது என்பதை மீறி, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஏறி வழிபாடு நடத்தியுள்ளனர். மாநில அரசு அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள். மீறி கொடுத்தால் கோவில் முன்பு நானே போராட தயங்கமாட்டேன். வருகின்ற ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து நடைபயணத்தை தொடங்கவுள்ளேன். அமித்ஷா தொடங்கி வைக்கவுள்ளார். கட்சி நிகழ்வாக ஆப்ரிக்கா செல்ல இருப்பதாலும், உள்துறை அமைச்சரின் நேரம் கிடைக்க வேண்டி உள்ளதாலும் நடைபயணம் தாமதமாகிறது.

மாமன்னன் படம் இன்னும் பார்க்கவில்லை. மாரி செல்வராஜ் முக்கிய கருத்துகளை படத்தில் வைக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படத்திற்கு வரவேற்பு என திமுகவினரே சொல்லிக்கொள்கிறார்கள். யார் மனதையும் புண்படுத்தாத மாதிரி படம் இருக்க வேண்டும்” என்றார். நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, ”எனக்கு நடிப்பு வராது என்பதால் யாரும் கூப்பிடுவதில்லை. நிஜத்திலும் எனக்கு நடிக்க தெரியாது” எனப் பதிலளித்தார். தொடர்ந்து, “யார் வேண்டுமானாலும்  அரசியலுக்கு வரலாம். விஜய் வந்தால் வரட்டும். திரைப்படத்தில் புகைபிடிப்பதைப் பார்த்து தான் இளைஞர்கள் அதனை பின்பற்றுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். சாலையில்  புகைப்பிடிப்பவர்களை பார்த்து கெட்டு போகமாட்டார்களா? சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு விதிகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget