மேலும் அறிய

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காவி திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் வைக்கப்பட்ட காவி திருவள்ளுவர் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, வெள்ளை நிற உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டுள்ளது. உலகப் பொதுமறை என திருக்குறள் போற்றப்படுகிறது. அதனை எழுதிய திருவள்ளுவர் எந்த அடையாளத்திற்குள்ளும் அடைபட்டுவிடாத வகையில், வெள்ளை உடையணிந்த படமே தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்தாண்டு மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காவி உடையணிந்து, திருநீறு பூசியபடி சித்தரிக்கப்பட்ட திருவள்ளுவர் படம் வெளியிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் காவி திருவள்ளுவர் படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதற்கு, எதிர்ப்பு கிளம்பியது.  திருவள்ளுவர் படத்திற்கு காவிச் சாயம் பூச பாஜக முயற்சிப்பதாக புகார்கள் எழுந்தன.

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

இந்நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர். அப்போது பல்கலைக்கழகத்திற்குள் உள்ள நூலக நுழைவு வாயிலில் புதிதாக திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த படம் காவி உடையணிந்தபடி இருக்கும் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் வேளாண்மை பல்கலைக் கழகத்தில் காவி திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், சமூக நீதிக் கட்சி உள்ளிட்ட அமைப்பினரும் காவி திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல பல்கலைக்கழகத்தின் மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை உடையணிந்த திருவள்ளுவர் படமே அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் அதிகாரிகளால் வைக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. உலகப் பொதுமறையான திருக்குறள் தந்த திருவள்ளுவரை ஒரு மதச்சாயம் ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல எனவும், இது தொடர்பாக அரசு விசாரணை நடத்தி காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

இதையடுத்து நூலகத்தில் வைக்கப்பட்டு இருந்த காவி உடையணிந்த திருவள்ளுவர் படத்தை பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக அகற்றியது. அந்த இடத்தில் வெள்ளை உடையணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் காவி திருவள்ளுவர் சர்ச்சைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் படம் அனைவருக்கும் பொதுவானதாக எந்த நிறமும் இல்லாமல் வெள்ளை உடையில் இருக்க வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
Prashant Kishor: விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
AFG vs ENG: வாழ்வா? சாவா? அரையிறுதி வாய்ப்பை தக்க வைப்பது ஆப்கானிஸ்தானா? இங்கிலாந்தா?
Prashant Kishor: விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
விஜய் ஒரு தலைவரே இல்லை...தொண்டர்களை பதற வைத்த பிரஷாந்த் கிஷோர்...
Aadhav Arjuna: விஜயின் பேண்ட், சட்டையைக் கூட காப்பி அடிக்கின்றனர்; தவெக விழாவில் திமுகவைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா!
Aadhav Arjuna: விஜயின் பேண்ட், சட்டையைக் கூட காப்பி அடிக்கின்றனர்; தவெக விழாவில் திமுகவைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா!
TVK 1st Anniversary: தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..#GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..#GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
Aadhav Arjuna: ’’நாங்கதான் எதிர்க்கட்சி; விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர்’’- ஈபிஎஸ்ஸுக்கு ஸ்கெட்ச் போடும் ஆதவ்அர்ஜூனா?
Aadhav Arjuna: ’’நாங்கதான் எதிர்க்கட்சி; விஜய்தான் எதிர்க்கட்சித் தலைவர்’’- ஈபிஎஸ்ஸுக்கு ஸ்கெட்ச் போடும் ஆதவ்அர்ஜூனா?
Prashant Kishor: விஜய்யின் நம்பிக்கையாக மாறிய பிரசாந்த் கிஷோர்! யார் இவர்? ஏன் இந்த முக்கியத்துவம்?
Prashant Kishor: விஜய்யின் நம்பிக்கையாக மாறிய பிரசாந்த் கிஷோர்! யார் இவர்? ஏன் இந்த முக்கியத்துவம்?
Embed widget