மேலும் அறிய

வனப்பகுதியில் ஹை பீம் விளக்குகளை ஒளிரச்செய்து யானையை விரட்டிய விவகாரம்; அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

நவமலை வனப்பகுதியில் காரில் ஹை பீம் விளக்குகளை ஒளிரச்செய்து யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு வனத்துறையினர் ஒரு இலட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள நவமலை வனப்பகுதியில் காரில் ஹை பீம் விளக்குகளை ஒளிரச்செய்து யானையை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு வனத்துறையினர் ஒரு இலட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள்  நுழைவது வழக்கம். வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு வருகிறது. இவ்வாறு கிராமப் பகுதிகளுக்குள் வரும் யானைகளை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிகளுக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள இந்த புலிகள் காப்பகத்தில் யானை, புலி, வரையாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் வால்பாறை, டாப்சிலிப் போன்ற சுற்றுலா தலங்களும் இருப்பதால், அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு தொந்தரவு அளிக்கும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


வனப்பகுதியில் ஹை பீம் விளக்குகளை ஒளிரச்செய்து யானையை விரட்டிய விவகாரம்; அதிமுக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மைய வனப்பகுதியில் உள்ள நவமலை பகுதியில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் அதிமுக பிரமுகர் ஒருவர் காரில் அத்துமீறி நுழைந்துள்ளார். அப்போது அதிமுக கொடியுள்ள காரில் இருந்து ஏதிரே வந்த ஒரு காட்டு யானையை ஹை-பீம் விளக்குகளை ஒளிரச் செய்தும், அதிவேகமாக காரை இயக்கியும், ஓலி எழுப்பியும் விரட்டியடித்துள்ளார். பின்னால் இருந்து யானைக்கு மிக அருகில் வாகனத்தை வேகமாக ஓட்டியதால் யானை அச்சத்தில் ஓடியுள்ளது. இந்த காட்சிகளை அந்த நபர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றியுள்ளார். பின்னர் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து வனத்துறையினர் அந்த காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்த மிதுன் என்பதும்,  அதிமுகவை சேர்ந்த அவர், அக்கட்சியின் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் மிதுனுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
"சர்ப்ரைஸ் இருக்கு.. மைதானத்தில் காத்திருங்க" ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள்!
KPK Jayakumar Death: ஜெயக்குமார் சடலம் இருந்த இடத்தில் கிடந்த டார்ச் லைட்! விலகுமா மர்மம்?
KPK Jayakumar Death: ஜெயக்குமார் சடலம் இருந்த இடத்தில் கிடந்த டார்ச் லைட்! விலகுமா மர்மம்?
இன்ஸ்பெக்டர் வீட்டிலே கைவரிசை! 250 சவரன் நகைகள், 5 லட்சம் பணம் கொள்ளை - மதுரையில் பரபரப்பு
இன்ஸ்பெக்டர் வீட்டிலே கைவரிசை! 250 சவரன் நகைகள், 5 லட்சம் பணம் கொள்ளை - மதுரையில் பரபரப்பு
G V Prakash - Saindhavi: ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து? முடிவுக்கு வருகிறதா 10 ஆண்டு காதல் வாழ்க்கை?
G V Prakash - Saindhavi: ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து? முடிவுக்கு வருகிறதா 10 ஆண்டு காதல் வாழ்க்கை?
Embed widget