மேலும் அறிய

கோவை தனியார் பள்ளியில் இரும்பு கம்பம் சாய்ந்து மாணவி படுகாயம்: பள்ளி நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப் பதிவு

மைதானத்தில் இருந்த கோல்போஸ்ட்டை பிடித்து தொங்கிக் கொண்டிருந்த நிலையில், கோல்போஸ்ட் சாய்ந்து குஷி பாக்மருக்கு தலையில் அடிபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அம்மாணவி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கோவை காந்திபார்க் அருகேயுள்ள குளோபல் நக்‌ஷத்ரா அப்பார்மெண்டில் வசித்து வருபவர் ஹேமந்த் குமார் பாக்மர். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பத்துடன் அக்குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு எத்தன் பாக்மர் என்ற 10 வயது மகனும், குஷி பாக்மர் என்ற 7 வயது மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கோவை கொடிசியா சாலையில் உள்ள ராக்ஸ் பள்ளிக்கூடம் என்ற தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். எத்தன் பாக்மர் 5ம் வகுப்பும், குஷி பாக்மர் மூன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதியன்று மதியம் ஒரு மணியளவில் உணவு இடைவெளியின் போது, பள்ளி வளாகத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் மற்ற குழந்தைகளுடன் குஷி பாக்மர் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது மைதானத்தில் இருந்த கோல்போஸ்ட்டை பிடித்து குழந்தைகள் தொங்கிக் கொண்டிருந்த நிலையில், கோல்போஸ்ட் சாய்ந்து குஷி பாக்மருக்கு தலையில் அடிபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் குஷி பாக்மரை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் ஹேமந்த் குமார் பாக்மருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு ஹேமந்த் குமார் பாக்மர் சென்று பார்த்த போது, குஷி பாக்மர் சுய நினைவின்றி சிகிச்சையில் இருப்பது தெரியவந்தது. மருத்துவர்களிடம் விசாரித்த போது வலது காதுக்கு பின்னால் தலையின் உட்புறம் அடிபட்டும், இடது நெற்றியில் சில இடங்களில் இரத்த கசிவும், பின்பக்க மூளையில் இரத்த கசிவு உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

குழந்தைகள் விளையாடும் கால்பந்து மைதானத்தில் ஆபத்தான இரும்பு கோல்போஸ்டை அகற்றாமல் அஜாக்கிரதையாகவும், குழந்தைகளை தன்னிச்சையாக விளையாட அனுமதித்த பள்ளித் தாளாளர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் ரூடால்ப், ஆசிரியை அமரீஸ்வரி மற்றும் விளையாட்டு ஆசிரியர் சீனிவாசன், பரத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹேமந்த் குமார் பாக்மர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விளையாட்டு ஆசிரியர் சீனிவாசன், பரத், ஆசிரியர் அமரீஸ்வரி, பள்ளி தாளாளர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி, முதல்வர் ரூடால்ப் ஆகிய 5 பேர் மீதும் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பட்டியல் இதோ.!
இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பட்டியல் இதோ.!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Embed widget