சென்னை ; தியேட்டரில் அதிர்ச்சி !! இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !! என்ன நடந்தது தெரியுமா ?
திருவல்லிக்கேணி பகுதியில் சினிமா தியேட்டரில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது

சென்னை ; தியேட்டரில் அதிர்ச்சி !! இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !! கைது செய்யப்பட்ட நபர்.
சென்னை கீழ்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 22 வயது பெண் ஒருவர், சென்னையில் உள்ள கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 08.01.2026 அன்று இரவு, அவரது மாமாவுடன் அண்ணா சாலையில் உள்ள தியேட்டருக்கு படம் பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்த போது, அங்கு அடையாளம் தெரியாத ஒரு நபர், அப்பெண்ணை உரசி சென்றுள்ளார்.
மேலும் அதே நபர் பின் தொடர்ந்து வந்து, தியேட்டருக்குள் படம் பார்த்துக் கொண்டிருந்த போது, தங்களுக்கு பின் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்தபடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், இது குறித்து அப்பெண்ணின் மாமா தட்டி கேட்ட போது, அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அண்ணா சாலை பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் ( வயது 25 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
வீட்டை குத்தகைக்கு விடுவதாக கூறி ரூ.6 இலட்சம் பணம் பெற்று குத்தகைக்கு வீட்டை கொடுக்காமல் மோசடி செய்த வீட்டு உரிமையாளர் கைது.
சென்னை ஓட்டேரி கே.எச். ரோடு பகுதியைச் சேர்ந்த கமல் ( வயது 32 ) என்பவர் 2024 ம் ஆண்டு குத்தகைக்கு வீடு தேடி கொண்டிருந்த போது, இடைத்தரகர் மூலம் அறிமுகமான காயத்ரி மற்றும் அவரது கணவர் காட்வின் ஆகியோர், தங்களுக்கு சொந்தமாக, அயனாவரம், பாளையக்கார தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை குத்தகைக்கு (Lease) விடுவதாகவும், ரூ.8 இலட்சம் பணம் கொடுத்தால் அவ்வீட்டில் உள்ளவர்களுக்கு பணத்தை கொடுத்து காலி செய்ய சொல்லி தங்களுக்கு குத்தகைக்கு விடுவதாக கூறியுள்ளனர்.
கமல் கடந்த 2024ம் ஆண்டு ரூ.6 இலட்சம் பணத்தை காட்வின் மற்றும் அவரது மனைவியிடம் கொடுத்து விட்டு, வீட்டை ஒப்படைத்த பின் மீதம் ரூ.2 இலட்சம் தருவதாக கூறி ஒப்பந்தம் போட்டு சென்றதாகவும், பின்னர் காட்வின் மேற்படி வீட்டை கமலுக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், தான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்ட போது, காட்வின் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.2.5 இலட்சம் மட்டும் பணம் கொடுத்துவிட்டு மீதி ரூ.3.5 இலட்சம் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி தலைமறைவாகி விட்டதாகவும், கமல் என்பவர் அயனாவரம் காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அயனாவரம் காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மோசடியில் ஈடுபட்ட காட்வின், ( வயது 46 ) வீரபாண்டியன் தெரு, வியாசர்பாடி என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் காட்வின் துணிக்கடை நடத்தி நஷ்டம் ஏற்பட்டதால், மனைவியுடன் சேர்ந்து அவர்களுக்கு சொந்தமான வீட்டை குத்தகைக்கு விடுவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட காட்வின் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரியை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.





















