கிரிக்கெட் வீரர் பெயரில் மோசடி ! 5 லட்சம் ஏமாந்த பெண் , அதிர்ச்சியில் காவல் துறை
சென்னையில் நடந்த குற்ற செய்திகளை காணலாம்

கிரிக்கெட் வீரர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கீதா ( வயது 38 ) இவர் அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில் , கடந்த ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் , தமிழக கிரிக்கெட் வீரர் பாபா இந்திரஜித் பெயரில் நட்பு கோரிக்கை வந்தது. பின் , மொபைல் போன் எண்களை பகிர்ந்து கொண்டோம்.
அவர் தனக்கு அரசு வேலை வாங்கி தரும் செல் வாக்கு இருப்பதாக கூறினார். இதை நம்பி பல தவணைகளில் 5.08 ரூபாய் பணப்பரிமாற்ற செயலியா 'ஜிபே ' மூலம் அனுப்பினேன். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. அவர் மீது நடவடிக்கை வேண்டும் என இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
போலீசாரின் விசாணையில் , கிரிக்கெட் அணி வீரர் பெயரில் மோசடியில் ஈடுபட்டது ஒட்டியம்பாக்கம் காரணை பிரதான பகுதியை சாலையை சேர்ந்த ராகுல் ( 29 ) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் நிறுவனத்தில் பணிபுரிந்த ராகுல், கடந்த ஜனவரி மாதம் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பின், குடும்பம் மற்றும் தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமண தேவைக்காக , பிரபலங்கள் பெயரில் போலி கணக்கை துவங்கி , பலரிடம் மோசடி செய்திருப்பது தெரிந்தது. விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார்.
போலி நகையை கொடுத்து 3 லட்சம் ரூபாய் ஏமாற்றிய பெண்
சென்னை பெரம்பூர் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் தேவிகா ( வயது 56 ) இவரது கணவர் குப்புசாமி. தனியார் நிறுவன ஊழியர். தேவிகா தன் வீட்டருகே நின்றிருந்த போது அங்கு வந்த மர்ம பெண் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். தன்னிடம் 7.5 சவரன் தங்க நகை உள்ளதாகவும், மருத்துவ செலவுக்காக , அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் கூறி , 5 லட்சம் ரூபாய் தரும்படி தேவிகாவிடம் கேட்டுள்ளார்.
இதை நம்பிய தேவிகா , தன்னிடம் இருந்த நகைகளை , 3 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்து , பணத்தை பெண்ணிடம் கொடுத்துள்ளார். பின், அப்பெண் அவரிடம் இருந்த நகைகளை தேவிகாவிடம் கொடுத்துள்ளார். பின் நகைக் கடைக்கு சென்ற தேவிகா, அப்பெண் கொடுத்த நகைகளை பரிசோதித்த போது , அவை போலியானவை என தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தேவிகா கொடுத்த புகாரின்படி , எம்.கே.பி நகர் போலீசார் வழக்கு பதிந்து , அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.88 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இதில் வந்த பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது, தமிழக பயணியர் இருவர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்று திரும்பினர். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்ளிடம் விசாரித்ததில் கடத்தல் குருவிகள் என தெரிய வந்தது.
அவர்களது உடைமைகளை பிரித்து பார்த்த போது அதில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று விசாரித்ததில் , உள்ளாடைக்குள் தங்க பசை மறைத்து கடத்தியது தெரிய வந்தது. அதன் எடை 781 கிராம். மதிப்பு 88 லட்சம் ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் , இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.





















