மேலும் அறிய

WhatsApp: இனி 30 இல்லை... அதுக்கும் மேல...! ஸ்டேட்டஸில் வாய்ஸ் மெசேஜ்! புது புது அப்டேட்களை வாரி வழங்கும் வாட்ஸ் அப்!

Besant Nagar : வாட்ஸப்பில் புதிய வசதி அறிமுகமாகியிருப்பது குறித்து தகவல்களை இங்கே காணலாம்.

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெட்டா நிறுவனம் தங்களது பயனர்களுக்கு திருப்திகரமான சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு புதிய வசதிகளை அவ்வப்பொழுது வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு 100 போட்டோகள் / வீடியோக்கள் வரை அனுப்பும் வசதி அறிமுகம் செய்துள்ளது. இதுவரை 30 போட்டோக்கள் / வீடியோக்கள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற நிலையில் புதிய அப்டேட் பயனர்களுக்கு பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது. 

WaBetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆண்ட்ராய்ட் வர்ஷன்  பீட்டா அப்டேட்டின் படி, இந்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. போட்டோ ஆல்பங்களை அனுப்ப இந்தப் புதிய வசதி உதவுகிறது. மேலும் இந்த புதிய வசதியின் மூலம், அதிகமான போட்டோக்களை தேர்வு செய்யும்போது ஒரே போட்டோவை மீண்டும் செலக்ட் செய்யாமல் இருக்கும் வகையில் இந்த அப்டேட் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

வாய்ஸ் மெசேஜ் அப்டேட் : 

2.22.21.5 பீட்டா அப்டேட்டின் படி, வாய்ஸ் மெசேஜ்களை வாட்ஸ் அப் ஸ்டேடஸ் ஆக வைக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதற்கான பணிகளில் வாட்ஸ் அப் தொழில்நுட்ப குழுவினர் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், வாய்ஸ் மெசேஜ் சேவையில் கூடுதல் வசதியை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்டு செய்யும்போது, விண்டோவை விட்டு வெளியே வந்தால், அதை ஆட்டோமேட்டிக்காக சேமித்து வைப்பது, ஸ்டேடஸில் ப்ளே/ பாஸ் வசதியை கொண்டு வருது உள்ளிட்டவைகளையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாய்ஸ் மெசேஜ்களை வாட்ஸ் அப் ஸ்டேடஸ் ஆக வைக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதற்கான பணிகளில் வாட்ஸ் அப் தொழில்நுட்ப குழுவினர் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

”New Fonts” வசதி:

புதிய எழுத்துருக்களை (Fonts) சேர்க்கவும் வாட்ஸ்-அப் செயலி டெவலப்பர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் GIFs-களை எடிட் செய்வதன் மூலம், புதிய எழுத்துருக்களை சேர்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.  புதிய அப்டேட் மூலம் Calistoga, Courier Prime, Damion, Exo 2 மற்றும் Morning Breeze ஆகிய புதிய எழுத்துருக்கள் வாட்ஸ்-அப் செயலியில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்மின்களுக்கான புதிய அம்சம்:

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான சமீபத்திய பீட்டா அப்டேட்டில், வாட்ஸ்அப் குழுவின் நோக்கம் (SUBJECT) மற்றும் விளக்கங்களுக்கான(DESCRIPTION) எழுத்து வரம்பை அதிகரித்துள்ளது. முன்பு வாட்ஸ்-அப் குரூப்பின் சப்ஜெக்டை  எழுதுவதற்கான வரம்பு 25 எழுத்துகளாக இருந்தது. ஆனால் விரைவில், பயனர்கள் 100 வார்த்தைகள் வரை எழுத முடியும். கூடுதலாக, விளக்கங்களுக்கான எழுத்துகளின் வரம்பு 512-லிருந்து 2048 வரை அதிகரிக்கும். இது குழுவின் தலைப்பு மற்றும் நோக்கத்தை, உறுப்பினர்களிடையே அட்மின் முறையாகவும், முழுமையாகவும் விளக்குவதை எளிதாக்குகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா சோதனையாளர்களுக்குக் கிடைக்கிறது.  விரைவில் அனைத்து பயனாளர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்-அப் செயலியில் புதிய அப்டேட்:

இந்தப் புதிய சிறப்பம்சங்கள் எல்லாம் பீட்டா பயனாளர்களுக்கும் மட்டுமே. இது மற்ற பயனர்களுக்கும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget