மேலும் அறிய
Advertisement
Vijay Makkal Iyakkam : சென்னையில் திடீரென நடந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம்...!
சென்னையில் இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக விஜய் இருந்து வருகிறார். தொடர்ந்து விஜய் நடிக்கும் படங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது. அதே போல தமிழகத்தில் நடிகர்களுக்காக இருக்கும் ரசிகர் மன்றத்தில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு தனி அடையாளம் உண்டு. ஆரம்பம் முதலே விஜய் மக்கள் இயக்கத்தை அவருடைய தந்தை நடத்தி வந்த நிலையில், தற்பொழுது விஜய் மக்கள் இயக்கத்தை விஜயின் மேற்பார்வையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஸ்ஸி ஆனந்த் நடத்தி வருகிறார்.
தற்பொழுது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர் மன்றத் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி மற்றும் விஜயின் புகைப்படத்தை பயன்படுத்தி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் விஜயின் ரசிகர்கள் போட்டியிட்டனர். இதனை வைத்து பார்க்கும் போது விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்தி, விஜய் நேரடி தேர்தல் அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்கத்திற்கான , சமூக வலைதள பக்கங்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க குருதி ஆப் உள்ளிட்டவற்றை வெளியிட்டிருந்தனர். அதேபோல் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பொதுமக்களை நேரில் சந்தித்து தொண்டாற்ற வேண்டும் எனவும் அப்பொழுது நிர்வாகிகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை அடுத்துள்ள உத்தண்டி சுங்கச்சாவடி அருகே இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் குவிந்துள்ளனர். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சார்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இளைஞர்களை கவர வேண்டும் என்றால், சமூக வலைதள பக்கங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாவட்ட வாரியாக பணிகளை மேற்கொண்டு அவற்றை வெளியே தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயன்படுத்துவதற்காக மாவட்டம் வாரியாக இணையதள பக்கங்களை உருவாக்கி, இவற்றில் பின்தொடர்பவர்கள் இருக்கவேண்டும். மேலும் மாவட்ட வாரியாக தாங்கள் செய்யும் நலத்திட்ட உதவிகளை இந்த முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பகிர வேண்டும் என உத்தரவிட்டனர். தொடர்ந்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடாக ஆகவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு பரபரப்பாகியுள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion