மேலும் அறிய

'அதிகார பகிர்வு ' X தளத்திலிருந்து நீக்கப்பட்ட வீடியோ - திருமாவின் விளக்கம் என்ன ?

அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பது அதிகார பகிர்வு, கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் பங்கீடு. ' அதிகாரத்தில் பங்கு வேண்டும் ' என பேசியதுதான் மூப்பனாருக்கு என்னிடம் பிடித்தது‌"

விடுதலை சிறுத்தை கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உள்ளது. திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக மாவட்டம் தோறும் கூட்டங்களை நடத்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் நடைபெற்ற, விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மண்டல அளவிலான செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் திருமாவளவன் பேசிய வீடியோவை எனது அதிகாரப்பூர்வ X தளத்தில் வீடியோ பதிவு செய்திருந்தார், இந்தநிலையில் வீடியோ தற்போது , நீக்கப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அப்படி என்ன பேசி இருந்தார் திருமாவளவன் ?

கூட்டத்தில் போதைப்பொருட்கள் குறித்தும், போதைப் பொருட்கள் எந்த வடிவில் பயன்பாட்டில் இருக்கிறது என்பது குறித்தும் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தார். கஞ்சா சாக்லேட் வடிவில் போதைப்பொருள் வந்துவிட்டது, ஸ்டிக்கர் வடிவில் போதைப்பொருள் வந்துவிட்டது , இது போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களை எளிதில் கண்டுபிடித்து விட முடியாது. 

அதிகார பகிர்வு ' X தளத்திலிருந்து நீக்கப்பட்ட வீடியோ - திருமாவின் விளக்கம் என்ன ?

கஞ்சா, பிரவுன் சுகர் இதுபோன்ற போதை பொருட்கள் வேண்டும் என்றால், ஹௌசிங் போர்டு காலனி எங்கு உள்ளது என பார்க்கிறார்கள். இது போன்ற போதை பொருட்கள், குறிப்பிட்ட இடத்தில் கிடைப்பது தண்ணியல்பாக நடக்கிறதா ? தயவுகூர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் பெரும்பாலும் எந்த பகுதியில் இருக்கிறது ? கஞ்சா பொட்டலம் எங்கே கிடைக்கிறது ? பிரவுன் சுகர் எங்கே கிடைக்கிறது ? போதைப் பொருட்கள் தாராளமாக எங்கே புழக்கத்தில் இருக்கிறது ? 

மேற்கோள் காட்டிய திருமா

இதன் பின்னால் திட்டமிட்ட சதி இருக்கிறது அதை மறந்து விடக்கூடாது. நீ எல்லாம் படிக்க வேண்டும் என ஆசைப்படாதே, உயர் பதவிக்கு வர வேண்டாம் என்று ஆசைப்படாதே, இவர்களை எப்படி வீரியம் இழக்க செய்வது,  இது ஒரு செயல் திட்டம். இப்படி எல்லாம் சிந்திப்பார்களா எனத் தோணும் ஆனால் சிந்திக்கிறார்கள். எதிர்த்து பேசக்கூடாது, போராடக்கூடாது, கல்வியில் உயர்ந்துவிடக் கூடாது, உயர் பதவிக்கு வர ஆசைப்படக்கூடாது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு நடைபெறுகிறது. 

அதிகார பகிர்வு ' X தளத்திலிருந்து நீக்கப்பட்ட வீடியோ - திருமாவின் விளக்கம் என்ன ?

தமிழ்நாட்டில் இதற்கு முன்பு யாராவது கூட்டணி ஆட்சி பற்றி பேசி குரலை உயர்த்தினார்களோ என்னவோ தெரியாது. 2016 இல் கூட்டணி ஆட்சி குறித்து குரலை உயர்த்திய விடுதலை சிறுத்தை கட்சி. அதிகாரத்தில் பங்கு வேண்டும், முன்னாள் இருப்பவர்கள் இப்படி பேசினார்களா என எனக்கு வரலாறு தெரியாது. அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பது அதிகார பகிர்வு, கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் பங்கீடு. ' அதிகாரத்தில் பங்கு வேண்டும் ' என பேசியதுதான் மூப்பனாருக்கு என்னிடம் பிடித்தது. 

விடுதலை சிறுத்தை கட்சி தேர்தல் அரசியலில் அடி எடுத்து வைத்த போது, முதல் முதலில் விடுதலை சிறுத்தை கட்சி முன்வைத்த முழக்கம் இதுதான். "கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் " இதுதான் எங்களது முழக்கமாக இருந்தது ‌ என பேசி இருந்தார்.

திருமாவளவன் பதில் என்ன ?

இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், 'தனக்கு வீடியோ நீக்கம் குறித்து எதுவும் தெரியாது ' எனவும், அட்மினிடம் கேட்க வேண்டும் எனவும் பதிலளித்தார். அந்தக் கோரிக்கை புதியதாக வைக்கப்பட்ட கோரிக்கை அல்ல , எப்பவுமே நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருவதுதான்.  செங்கல்பட்டில் நடந்த கூட்டத்தில் மேற்கோள் காட்டி பேசினேன். அதைதான் அவர்கள் பதிவு செய்திருந்தார்கள், அதை ஏன் எடுத்தார்கள் என தெரியவில்லை என விளக்கம் அளித்து இருந்தார்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் , சமூக வலைதள பக்கங்களை இரண்டு அட்மின்கள் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget