மேலும் அறிய
Advertisement
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! இருவழிச் சாலையாக மாறிய பல்லாவரம் மேம்பாலம்!
இதனால் குரோம்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், பல்லாவரம் மேம்பாலத்தில் ஏறி,விமான நிலையம் அருகே இறங்கி செல்வார்கள்.
இரு வழி சாலையாக மாற்ற பட்ட பல்லாவரம் மேம்பாலம் விரைந்து செல்லும் வாகனங்கள். நீண்ட நாள் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
சென்னை அனகாபுத்தூர் பல்லாவரம் சந்திப்பு மற்றும் சென்னை விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் சந்திப்பு என பல்லாவரம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் பல ஆண்டுகளாக நீடித்து வந்த இப்பிரச்னைக்கு தீர்வாக, பல்லாவரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டது.இருபாதைகள் கொண்ட, ஒரு வழி மேம்பாலமாக இது அமைந்துள்ளது.
இதனால் குரோம்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், பல்லாவரம் மேம்பாலத்தில் ஏறி,விமான நிலையம் அருகே இறங்கி செல்வார்கள். அதேநேரத்தில், கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள், வழக்கம் போல், ஜி.எஸ்.டி., சாலை வழியாகவே செல்ல வேண்டி உள்ளது. இதன் காரணமாக பல்லாவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
View this post on Instagram
அதனைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஒரு வழி பாதையாக இருந்த பல்லாவரம் மேம்பாலத்தை இரு வழிப்பாதையாக மாற்றி நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் வாகனங்களுக்கு இன்று அனுமதி அளித்தனர். இதன் காரணமாக தற்போது போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் வேகமாக பயணித்து வருகின்றன.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் தெரிவித்ததாவது: தாம்பரத்திலிருந்து செல்லும் பொழுது இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலானது சற்று குறைவாகவே காணப்படும். இதற்கு காரணம், குரோம்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், பல்லாவரம் மேம்பாலத்தில் ஏறி,விமான நிலையம் அருகே இறங்கி செல்வார்கள். அதேநேரத்தில், கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள், வழக்கம் போல், ஜி.எஸ்.டி., சாலை வழியாகவே செல்ல வேண்டி உள்ளது. இதன் காரணமாக பல்லாவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. தற்பொழுது ஒரு வழி பாதையாக இருந்த மேம்பாலம் இரண்டு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதால், பாதி வாகனங்கள் கீழே செல்வது குறையும் என்பதால் போக்குவரத்து நெரிசல் சிக்கல் குறை வாய்ப்பு உள்ளது. அதாவது கிண்டியில் இருந்து நேரடியாக தாம்பரம் செல்பவர்களுக்கு இந்த ஏற்பாடு மிக பெரிய அளவில் கை கொடுக்கும் என தெரிவித்தனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion