மேலும் அறிய
Advertisement
வேடந்தாங்கலை பார்வையிட இதுதான் "பர்ஃபெக்ட் டைம்"...! குவியும் ஆயிரக்கணக்கான பறவைகள்..!
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 20 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், செங்கல்பட்டிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது. இது இந்தியாவின் பெரிய நீர் பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும். பறவைகள் தண்ணீரில் மூழ்கிய மரங்களின் மீது கூடு கட்டி வாழ்கிறது. வெளிநாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக பல ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து பருவகாலத்தில், இங்கு வரும் சில பறவைகள், அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் இருக்கும்.
பறவைகள், எறும்புகள், புல்வெளிகள், டார்ட்டர், பிளேமிங்கோக்கள், பெலிகன்கள், மவுண்ட் கோன்ஸ், ஹெரோன்ஸ், கிங்ஃபிஷர்ஸ், சாண்ட்பீப்பர்ஸ், வெள்ளை ஐபிஸ், ஸ்பூன் பில்ஸ், ஸ்வான்ஸ் மற்றும் சாம்பல் வேக்டெயில் உள்ளிட்ட பெருமளவிலான புலம்பெயர்ந்த பறவைகள் வருகை தருகையில், பறவைகளை ஆற்றங்கரை அல்லது கண்காணிப்பு கோபுரத்திலிருந்து பார்க்க முடியும்.
இந்த சரணாலயம் பார்வையிட சிறந்த நேரம் நவம்பர் முதல் மார்ச் வரை ஆகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் பல சுற்றுலா தளங்கள் இருந்தாலும் மிக முக்கிய சுற்றுலா தளமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் விளங்கி வருகிறது. ஏனென்றால், பல ஆயிரக்கணக்கான பறவைகள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குறிப்பிட்ட சில மாதங்களில் வந்து செல்வதால் சுற்றுலா பயணிகள் பலரும் இதைக் காண ஆர்வமுடன் குவிக்கின்றனர். இந்த இடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
சென்னைக்கு அருகே இருக்கும் சரணாலயம்...!
சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சென்னை உள்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் என அனைவரும் 2 மணி நேரத்திற்கு உள்ளாகவே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை வந்து அடைய முடியும். இது போக வட மாவட்டங்களான திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் பேருந்து மூலமாக சில மணி நேரங்களில், பேருந்து மூலமாகவோ அல்லது தங்கள் சொந்த வாகனம் மூலமாக வேடந்தாங்கல் சரணாலயத்தை பார்வையிட முடியும்.
அதிகரிக்கும் பறவைகள் எண்ணிக்கை..!
இந்த ஆண்டு பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மான்டஸ் புயல் காரணமாக, 16 அடி உயரமுள்ள வேடந்தாங்கல் ஏரி, தற்போது முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. அக்டோபர் முதல் வாரம் முதல் வடகிழக்கு பருவ மழை மாண்டச் புயல் காரணமாக தொடர்ந்து பெய்து ஏரின் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் பாகிஸ்தான், பர்மா, ஸ்ரீலங்கா, சைபீரியா போன்ற வெளிநாடுகளில் இருந்து, வர்ண நாரை வெளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தக்குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழை கடா, கரண்டிவாயன், தட்ட வாயன், பெரிய நீர்க்காகம் உள்ளிட்ட 26 வகையான பறவைகள் உள்ளன.
20000 பறவைகள்
தற்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகளிலான பறவைகள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்து வருகின்றன. பறவைகள் காண்பதற்காக வெளிநாட்டினர், வெளி மாநில வெளி மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
பறவைகள் வர துவங்கிய காரணத்தினால் பொதுமக்கள் பார்வையை விடுவதற்கு ஏற்ற இடமாக தற்பொழுது வேடந்தாங்கல் பறவை உருவெடுத்துள்ளது. ஆயிரக்கணக்கான பறவைகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் , இதுதான் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை பார்வையிட்டதற்கு ஏற்ற நேரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வேடந்தாங்கல் சீசன் துவங்கியுள்ளதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தஞ்சாவூர்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion