விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனம் என்றால் வர தான் செய்யும் அதனை நான் உள்வாங்கிக்கொண்டு முறையாக செயல்படுவேன். புதிதாக பதிவேற்க உள்ள அமைச்சர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
துணை முதலமைச்சர் - குவியும் வாழ்த்துக்கள்
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பார் என்று கடந்த சில மாதங்களாக தகவல் வெளியான நிலையில் , நேற்று இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதனை தொடர்ந்து துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் , தொண்டர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இன்று , உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உடன் சென்று கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின். பின்பு செய்தியார்களை சந்தித்து பேசினார்.
விமர்சனங்கள் - சரி செய்வேன்
பல்வேறு தரப்பினர் நேற்று இரவு முதலே வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். எந்த ஒரு விமர்சனங்கள் வந்தாலும் அதற்கு பதில் அளிக்க தயாராக உள்ளேன்.
துணை முதலமைச்சர் என்பது பதவி கிடையாது கூடுதல் பொறுப்பு. எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்காக உழைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கிய முதலமைச்சர் மற்றும் பொதுச் செயலாளருக்கு நன்றி. விமர்சனங்களை உள்வாங்கி அதிலே ஏதேனும் தவறு இருந்தால் சரி செய்து கொள்வேன்.
பணிகளால் எதிர் கொள்ள முடியும்
நான் அமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில் பல்வேறு விமர்சனங்கள் வந்தது. இந்த விமர்சனங்களை நான் பணிகளால் தான் எதிர் கொள்ள முடியும்.
விமர்சனம் என்றால் வர தான் செய்யும் அதனை நான் உள்வாங்கிக் கொண்டு முறையாக செயல்படுவேன். புதிதாக பதிவேற்க உள்ள அமைச்சர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.