பெரியார் பெயரில் தமிழக அரசின் விமான சேவை... ஐடியா கொடுத்த டி.ஆர்.பி.ராஜா... ட்விட்டரில் ட்ரெண்ட்!
”தமிழ்நாட்டின் சமத்துவ வளர்ச்சிக்கு பெரியார் தான் சிறகுகள் கொடுத்தார். ’பெரி ஏர்’ நல்ல பெயராகத் தோன்றுகிறது. இந்தப் பெயரிலேயே தமிழ்நாடு அரசு விமான சேவையைத் தொடங்கலாம்”
”தமிழ்நாடு அரசு ஏன் ’பெரி ஏர்’ என்ற பெயரில் ஏன் புதிய விமான சேவையைத் தொடங்கக் கூடாது” என திமுக ஐடி விங்கின் மாநிலச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தூத்துக்குடி டூ சென்னை விமான டிக்கெட் விலையைப் பகிர்ந்துள்ள டி.ஆர்.பி.ராஜா, ”இந்தக் காசுக்கு சிங்கைக்கே போகலாமே? மாநில அரசு சொந்தமான விமான சேவையை வழங்கும் நேரம் வந்துவிட்டதோ?
தமிழ்நாட்டின் சமத்துவ வளர்ச்சிக்கு பெரியார் தான் சிறகுகள் கொடுத்தார். ’பெரி ஏர்’ நல்ல பெயராகத் தோன்றுகிறது. இந்தப் பெயரிலேயே தமிழ்நாடு அரசு விமான சேவையைத் தொடங்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
#FlightTickets for an ATR flight from #Tuticorin to #Chennai😳
— Dr. T R B Rajaa (@TRBRajaa) September 8, 2022
இந்த காசுக்கு சிங்கைக்கே போகலாமே!
Is it TIME to operate a #StateOwned flight service ?
"PeriAir" sounds like a good name😇 Why not🤔#Periyar gave wings to TN's equitable growth model🔥#AirFareHike #DravidianModel pic.twitter.com/BnYkYa2o1G
இந்தப் பதிவு ட்விட்டரில் அதிக லைக்குகளைப் பெற்றும், விவாதங்களைக் கிளப்பியும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
முன்னதாக இதேபோல், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது, பாஜகவினர் காலணி வீசியதற்கு டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்திருந்தார்.
தேசிய கொடி மீது தாக்குதல் நடத்தி நமது கொடியை அவமதிக்கும் இந்த கீழ்தரமான கும்பல் தான் இன்று வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற சொல்கிறது!#SHAMEonBJP.
— Dr. T R B Rajaa (@TRBRajaa) August 13, 2022
All those in this clip need to be arrested & booked under stringent sections @tnpoliceoffl
IF NOT cadre may take matter into their hands. https://t.co/MHmvV71wFM pic.twitter.com/bRCDrHc5Ot
அதில் ”தேசிய கொடி மீது தாக்குதல் நடத்தி , கொடியை அவமதிப்பவர்கள் தான், வீடுகளில் கொடியை ஏற்றச் சொல்கிறார்கள்” என்று தெரிவித்தார்
மேலும், காலணி வீச்சு தொடர்புடையவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் திமுக தொண்டர்கள் கையில் எடுக்க வேண்டி வரும் என் தெரிவித்தார்.