மேலும் அறிய

TNPSC Group 2, 2A Application: குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- அறிவிப்பாணை வெளியீடு

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் இன்று (பிப்.23) முதல் மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் இன்று (பிப்.23) முதல் மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

2022ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெறும். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.

முதன்மைத் தேர்வுகள் தமிழ்நாட்டில் 32 மையங்களில், காலை 9 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 32 நகரங்களில் 117 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும். மாலையில் நடைபெறும் தேர்வில் எந்த நேர மாற்றமும் இல்லை. தேர்வில் ஜெல் பேனா, பால் பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தலாம்.

இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளன. அதற்குப் பிறகு முதன்மைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். துறை ரீதியான பணி நியமனம் குறித்து மார்ச் 3ஆம் தேதி விரிவான அறிவிப்பு வெளியிடப்படும். 

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை: 

* அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*  டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும் என்றும் விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள், இனி தேர்வு முடிந்தபின் தனியாகப் பிரிக்கப்படும். 

* தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 

* அதிகத் தேர்வர்களைக் கொண்ட தேர்வுகளையும் கணினி வழித் தேர்வாக நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்தகட்ட தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படுவர்.


TNPSC Group 2, 2A Application: குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- அறிவிப்பாணை வெளியீடு

டிஎன்பிஎஸ்சி வழியாகப் பணியாளர்கள் நியமனம்

* தற்போது நியமிக்க உள்ள காலிப் பணியிடத்தில் 124 பணியிடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் தரப்பட்டுள்ளன. 

* பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை, டிஎன்பிசியிடம் ஒப்படைக்க தமிழ்நாடு உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

* ஆவின், வீட்டுவசதி வாரியம், மின்வாரியம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துப் பணி நியமனமும் டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்நிலையில் இன்று தொடங்கியுள்ள விண்ணப்பப் பதிவில் குரூப் 2, 2ஏ பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பில் விண்ணப்பிக்கலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget