Madras Day 2022 : 'சென்னையின் கலாசாரம் அனைத்து மக்களையும் ஈர்த்தது' - ஆளுநரின் சென்னைதின வாழ்த்து!
சென்னை தினம் என்று அழைக்கப்படும் சென்னையின் 383வது நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் தலைநகராகவும் திகழ்வது சென்னை. சென்னை தினம் என்று அழைக்கப்படும் சென்னையின் 383வது நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தினத்தை சிறப்பிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் கடந்த இரண்டு நாளாக கோலாகலமாக விழா எடுத்து கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை தினத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னைக் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''சென்னையின் செழுமையான கலாச்சாரம், ஆன்மீகம், துடிப்பான புலமை ஆகியவற்றின் நீண்ட வரலாறு அனைத்து மக்களையும் ஈர்த்தது மற்றும் ஊக்கப்படுத்தியது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
#சென்னைதினத்தை முன்னிட்டு மக்களுக்கு மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.சென்னையின் செழுமையான கலாச்சாரம், ஆன்மீகம், துடிப்பான புலமை ஆகியவற்றின் நீண்ட வரலாறு அனைத்து மக்களையும் ஈர்த்தது மற்றும் ஊக்கப்படுத்தியது என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். pic.twitter.com/IrYKbtQqWy
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 22, 2022