ECR Accident: மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு!
ECR Accident: மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்துக்கு ₹2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மாமல்லபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சாலை விபத்து:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை அருகே ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள், ஆட்டோ ஓட்டுநர் உட்பட ஆறு பேர் சம்ப இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சர் இரங்கல்:
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு, உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.
சாலை விபத்து:
மாமல்லபுரம் அடுத்துள்ள மனமை என்ற பகுதியில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில், சுமார் 30 பேர் பயணித்திருந்தனர். அப்பேருந்து மகாபலிபுரம் அடுத்த மனமை என்ற பகுதியில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக மகாபலிபுரம் மணமை என்ற பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில், ஆட்டோவில் பயணித்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே பலி. 2 குழந்தைகள்,3 பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்கள்.
விபத்து குறித்த தகவல் அறிந்து சென்ற மகாபலிபுரம் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இரண்டு வாகனங்களும், அதி வேகத்தில் வந்தது தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.