சென்னை வானிலை: மழை எச்சரிக்கை! மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு, வெப்பம் அதிகரிக்கும் - முழு விவரம்
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான , மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது - வானிலை மையம்

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
கடந்த 24 மணி நேரத்தில் , தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக பட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை. ஓரிரு இடங்களில் சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் அதிக பட்ச வெப்ப நிலை ஒரு சில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் , ஏனைய தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது.
அதிக பட்ச வெப்ப நிலையாக , மதுரை விமான நிலையம் 40.0° செல்சியஸ் ஆகவும் , குறைந்த பட்ச வெப்ப நிலையாக கரூர் பரமத்தியில் 22.0° செல்சியஸ் ஆகவும் உள்ளது.
அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக , இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை 2 ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3 மற்றும் 4 ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
5 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
அதிக பட்ச வெப்ப நிலை பற்றிய முன்னறிவிப்பு ;
01-07-2025 மற்றும் 02-07-2025 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும்.
01-07-2025 மற்றும் 02-07-2025 தேதிகளில் அதிக வெப்ப நிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு ;
இன்று (01-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
நாளை (02-07-2025) , வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான , மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ;
தமிழக கடலோரப்பகுதிகளில் 01-07-2025 முதல் 03-07-2025 வரை தென் தமிழக கடலோர ப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். 04-07-2025 மற்றும் 05-07-2025 தேதியில் எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகளில் 01-07-2025 அன்று வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்திய வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
02-07-2025 ம் தேதி வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்திய வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய ஒரிசா-மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03-07-2025 அன்று மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.
04-07-2025 அன்று மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
05-07-2025 தேதியில் மத்திய வங்கக் கடலின் அநேக பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.
மேற் குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.






















