(Source: ECI/ABP News/ABP Majha)
எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்ட பில் கலெக்டர்: காஞ்சியில் காத்திருந்து கையும் களவுமாக பிடித்த போலீஸ்
Kanchipuram News: " ரேணுகாவிடம் லஞ்ச பணம் 10 ஆயிரம் அளிக்கும் போது அங்கு மறைந்திருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் சொத்து பெயர் மாற்றம் செய்ய பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளர் ரேணுகா கைது செய்யப்பட்டார். மதுராந்தோட்டத் தெருவைச் சேர்ந்த சுந்தர் என்பவர் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்ததாவது : சொத்து வரி அலுவலர் ரேணுகா பட்டா மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தகவலை உறுதி செய்து, லஞ்சம் வாங்கும் பொழுது கையும் களவுமாக பிடித்தோம் என தெரிவித்தனர். அதிகாரிகள் தங்களுடைய பணிகளை செய்ய , பொதுமக்கள் அதிகாரிகளுக்கு எந்த கையூட்டும் கொடுக்க தேவையில்லை, பொதுமக்கள் தாராளமாக லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து புகார் அளிக்கலாம் என கோரிக்கை வைத்தனர்
லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிப்பது எப்படி ?
அரசு அதிகாரி ஒருவர் தன் கடமையைச் செய்ய லஞ்சம் கேட்கிறார் என்றால் அவரைப் பற்றி எங்கு எப்படிப் புகார் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லையா. உடனே http://www.dvac.tn.gov.in/ என்ற தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம். அங்கு லஞ்சம் குறித்து யாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் முதல் செல்போன் எண் வரை அத்தனையும் இந்த இணையதளத்தில் தெளிவாக உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ்
புகழ்பெற்ற நடவாவி கிணறு..! பசுமையா மாறப்போகுது..! காஞ்சிபுரம் மக்களுக்கு ஜாலிதான்..!
ஆந்திராவிலிருந்து இப்படியும் தமிழகம் வரும் கஞ்சா...! தலைசுற்ற வைக்கும் கஞ்சா பிரச்சனை..!