மேலும் அறிய

புகழ்பெற்ற நடவாவி கிணறு..! பசுமையா மாறப்போகுது..! காஞ்சிபுரம் மக்களுக்கு ஜாலிதான்..!

Sanjeevirayar temple: சஞ்சீவிராயர் திருக்கோயில் நிலத்தில் வனத்தை உருவாக்கும் ஊராட்சி மன்றம் செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் அருகே சஞ்சீவிராயர் திருக்கோயில் நிலத்தில் வனத்தை உருவாக்கும் ஊராட்சி மன்றம் செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்
 
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாவட்டம் என்பது தொழிற்சாலைகள் மாவட்டம் என தற்போது விளங்கி வரும் நிலையில், இங்கு மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் சாலை பணி விரிவாக்கம் எனக் கூறிக்கொண்டு சாலை ஓரம் மரங்களை உள்ள இழந்து வருகிறோம். இதற்கு மாற்றாக நெடுஞ்சாலை துறை பணிகள் முடிந்தவுடன் சாலையோர மரங்களை நட முடிவு செய்து, மரக்கன்றுகளை பணிகள் முடிந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். மேலும் தொழிற்சாலைகள் புகை வாகனங்களின் புகை என நாள்தோறும் எண்ணிக்கையில் அதிகமாக சுத்தமான காற்று என்பதே , தற்போது இல்லாத நிலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உருவாகி வருகிறது.
 
மரக்கன்றுகளை நடும் பணியில் 100 நாள் ஊழியர்கள்
மரக்கன்றுகளை நடும் பணியில் 100 நாள் ஊழியர்கள்
தமிழக அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம்
 
இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், தொழிற்சாலை புகைகள் மற்றும் குப்பைகள் எரிப்பதால் சுற்றுச்சூழல் தொடர்ந்து மாசடைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் காலியாக உள்ள, தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை தோட்டக்கலை துறை மூலம் உற்பத்தி செய்து,  கிராம ஊராட்சிகளுக்கு வழங்க உத்தரவிட்டு உள்ளது. இது மட்டுமில்லாமல் வீடுகள் தோறும் இலவசமாக இரண்டு மரக்கன்றுகளையும், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஊராட்சிகள் மூலம் வழங்கி வருகிறது.
 
மரக்கன்றுகளை நடும் பணியில், 100 நாள் ஊழியர்கள்
மரக்கன்றுகளை நடும் பணியில், 100 நாள் ஊழியர்கள்
சஞ்சீவிராயர் திருக்கோயில் நிலத்தில் 
 
இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சஞ்சீவிராய திருக்கோயிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உள்ளது.  இந்த நிலமானது, சித்ரா பெளர்ணமி அன்று புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் எழுந்தருளும் நடவாவி கிணறு அருகே அமைந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் யோசனைக்கிணங்க, ஊராட்சி  பொதுமக்கள் ஒத்துழைப்புடன், தோட்டக்கலை துறையுடன் இணைந்து சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் மா , பலா , கொய்யா,  நெல்லி நாவல் உள்ளிட்ட பழவகை மரங்களும், தென்னை, புங்கை,  வேப்பம் உள்ளிட்ட நிழல் தரும் மரங்களையும் தற்போது நடவு செய்து அதற்கு 100 நாள் திட்ட வேலை பணியாளர்கள் உதவியுடன் பராமரிப்பு பணியும் மேற்கொண்டு வருகின்றனர்.
 
மரக்கன்றுகளை நடும் பணியில் 100 நாள் ஊழியர்கள்
மரக்கன்றுகளை நடும் பணியில் 100 நாள் ஊழியர்கள்
 
4 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறை
 
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், "ஆக்கிரமிப்பில் இருந்த திருக்கோயில் நிலம் உரிய ஆவணங்களுடன் மீட்கப்பட்டு, தற்போது சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறை உதவியுடன் 750 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முடிவு செய்து தற்போது இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இயற்கை சூழலை ஊக்குவிக்கும் வகையில், மரக்கன்றுகளையும், பறவை இனங்களுக்காக பழவகை மரங்களும் நடப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் பக்தர்களுக்காக 27 நட்சத்திர ஸ்தல விருட்ச மர வகைகளும், மூலிகை செடிகள் இப்பகுதியில் நடவு செய்யப்பட உள்ளது. கிராமமே சேர்ந்து பசுமை வனம் உருவாக்குவது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது” என தெரிவித்தார். மரக்கன்றுகளை நடும் பணியில் 100 நாள் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget