மேலும் அறிய
Advertisement
Chennai : கண்ணகி நகரில் சிறார் மன்றம்..! கால்பந்து விளையாடி திறந்து வைத்த தாம்பரம் காவல் ஆணையர்
சென்னை கண்ணகி நகரில் சிறார் மன்றத்தின் புதிய கட்டிடத்தை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து கால்பந்தை உதைத்து விளையாடினார்.
சென்னை கண்ணகி நகரில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கண்ணகிநகர் போலீசார் சார்பில் பாய்ஸ் & கேல்ஸ் கிளப் அமைத்து மாணவர்களுக்கும் அப்பகுதி விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பல்வேறு போட்டிகளுக்கான பயிற்சி அளித்து தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
பல்வேறு விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் புதிதாக விளையாட்டு மைதானம் மற்றும் பாய்ஸ் கிளப் கட்டிடம் கொடுக்கப்பட்டுள்ளது. பாய்ஸ் கிளப்பை சேர்ந்த அனிதா என்ற கல்லூரி மாணவி தேசிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று சாதித்துள்ளார். அவருக்கு எச்.சி.எல்.சார்பில் புதிய சைக்கிளை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் வழங்கினார்.
இவ்விழாவில் பேசிய தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் கண்ணகி நகர் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் சீர் செய்து தரப்பட்டுள்ளது. தேசிய அளவில் கபடி போட்டியில் அனிதா பதக்கம் வென்று சாதித்துள்ளார். பாய்ஸ் கிளப் தமிழகம் முழுவதும் இருந்தாலும் கண்ணகி நகர் பாய்ஸ் கிளப் சிறந்த கிளப் என கூற முடியும்.
ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு, ஊர் கூடி தேர் இழுப்போம் என கண்ணகிநகர் பகுதி மக்களை ஒன்றிணைந்து செயல்பட அழைத்தார். மைதானத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்குமாறு பயன்படுத்துபவர்களை கேட்டுக் கொண்டார். கிரிக்கெட், வாலிபால், ரக்பி, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் பயிற்சி பெற்று வரும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு நன்றி தெரிவித்தார். இவ்விழாவில் எச்.சி.எல். துணைத் தலைவர் நிதி பண்டிர் கலந்து கொண்டார். தாம்பரம் காவல் ஆணையர் இதனைத் தொடர்ந்து சிறுவர்களுடன் இணைந்து சிறிது நேரம் விளையாடி அவர்களை ஊக்கப்படுத்தினார். தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கல்வி மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து பெற்றோர்களுக்கும் , தங்களை சார்ந்த பகுதிக்கு நற்பெயரை பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்தார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion