ஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்கும் மீனவ சமுதாய இளைஞர்களுக்கு வாய்ப்பு - இதை மிஸ் பண்ணாதீங்க..!
மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளித்தல்.
மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தம் அமைச்சர் 12.11.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்ததன்படி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை சென்னை (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலோ அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரியில் உள்ள காஞ்சிபுரம்(இருப்பு) நீலாங்கரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 31.10.2022 பிற்பகல் 05.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சென்னை (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் அலுவலகம் அல்லது காஞ்சிபுரம்(இருப்பு) நீலாங்கரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
அலுவலக முகவரி:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்,
எண்.1/269, கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை, சென்னை-600 115
அலுவலக தொலைபேசி எண்:
044-2449 2719
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்