மேலும் அறிய
Advertisement
"தண்ணீர் பூமியில் இருந்து கிடைக்கிறது" - முதலமைச்சர் ஸ்டாலினை சிரிக்கவைத்த பெண்..
தமிழக கிராம ஊராட்சிகளின் நீடித்த, நிலைத்த வளர்ச்சிக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு, "திராவிட மாடல்" என்பதை உலகிற்கு நாம் உணர்த்துவோம் என கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம், ஆண்டுதோறும் ஏப்., 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதுார் ஒன்றியம் செங்காடு ஊராட்சியில், நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தாமோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு, ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் பெருந்தகை, ஊரக வளர்ச்சி முதன்மை செயலர் அமுதா ஐஏஎஸ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மற்றும் செங்காடு ஊராட்சி மன்ற தலைவர் செஞ்சுராணி கவசகர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் உடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுவாரசியமாக கலந்துரையாடினார். அப்போது அங்குள்ள மக்களிடம், பயிர்க்கடன், ரேஷன் பொருட்கள் முறையாக கிடைக்கிறதா? பள்ளிகளுக்கான மேலாண்மை குழு அமைக்கப்பட்டது குறித்து தெரியுமா? போன்ற பல கேள்விகளை கிராம சபை கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார்.
"தண்ணீர் பூமியில் இருந்து கிடைக்கிறது" முதல்வரையே சிரிக்க வைத்த பெண் pic.twitter.com/wnM3nSAlFc
— Kishore Ravi (@Kishoreamutha) April 24, 2022
மேலும், குடிநீர், ரேஷன் பிரச்சினைகள் குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தார். அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல் அமைச்சர், அவர்கள் குறைகள் விரைவில் சரி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்களிடம் முறையாக குடிநீர் வருகிறதா என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய பெண் ஒருவர் தண்ணீர் வருகிறது என சொல்ல, தொடர்ந்து முதல்வர் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என கேள்வி எழுப்பினார் அதற்கு அப்பெண் "வெகுளியாக பூமியில் இருந்துதான் வருகிறது" என கூறினார். இது கேட்ட முதல்வர் சிரித்தார் அதுமட்டுமில்லாமல் அங்கு இருந்த மக்களிடையே சிரிப்பை வரவைத்தது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
மேலும் அவர் கிராம சபையில் பேசியதாவது : ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் அதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஐக்கிய நாடு சபை, 17 வகையான நிலையான நீடித்த வளர்ச்சிக்கு இலக்கணமாக சிலவற்றை மேற்கோள் காட்டி உள்ளது. அதன்படி ஊராட்சிகளில் அனைத்து வசதிகள் ஏற்படுத்தி, தன்னிறைவு அடையக்கூடிய வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டு வந்தார் என்பது நாடறிந்த உண்மை. கலைஞர் கொண்டு வந்த திட்டம் தான் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.
பெரியார் நினைவு சமத்துவபுரம்
அந்தத் திட்டத்தை புதுப்பொலிவோடு நாம் இப்போது நிறைவேற்ற தொடங்கியுள்ளோம். அவர் கொண்டுவந்த திட்டத்தில் மிக முக்கியமானவை சமூக நீதியோடு, இன,மத, ஏற்றத்தாழ்வு இல்லாமல், ஜாதி, மதம் எல்லாம் கடந்து அனைவரும் ஒற்றுமையோடு, ஒருமித்த கருத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் தந்தை பெரியார் பெயரில் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம். அனைவருக்கும் நன்றாக தெரியும். அதேபோல மக்கள் பணிகளை அடையாளம் கண்டு அரசின் உதவிகளோடு தங்களுக்கு தேவையான பணிகளை நிறைவேற்றிக் கொள்ள, அதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் நமக்கு நாமே திட்டம். ஊராட்சிகள் அனைவரிடமும் முழுமையாக அறிவுச் சுடரை ஏற்றவேண்டும் என்பதற்காக பேரறிஞர் அண்ணா பெயரில் நூலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியில் உள்ளாட்சிகள் மீது தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
6 முறை கிராம சபை கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருப்பதுபோல ஊராட்சி அளவில் அனைத்து துறைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து அவர்களின் சேவை கிராம மக்களுக்கு சென்றடைய கிராம செயலகம் உருவாக்கப்படுகிறது. மக்களின் பங்கேற்பு களை அதிகப்படுத்தி, மக்களுக்கு முழு அதிகாரத்தை ஏற்படுத்தி இனி ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டம் நடைபெறும். இதற்கு முன்பு ஆண்டுக்கு நான்கு கிராமசபை கூட்டம் நடைபெறும் ஆனால் அதுவும் முறையாக நடைபெறவில்லை. இதன் காரணமாக, 110 விதியின் கீழ் இனி ஆண்டுக்கு கட்டாயமாக, 6 முறை கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும் என அறிவித்து உள்ளேன். நோயற்ற ஊராட்சிகளின் இலக்கை எட்டுவதற்கு மக்களை தேடி மருத்துவம், மொத்தமுள்ள ஊராட்சிகளில் பிரதிநிதிகளுக்கு 56 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சி
அனைத்து ஊராட்சி பிரதிநிதிகளுக்கும் 5 முதல் 10 மடங்குவரை அமர்வு படி உயர்த்தி அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நவம்பர் 1 உள்ளாட்சி நாளாக கடைபிடித்து சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு 'உத்தமர் காந்தி விருது' வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள, 7.46 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள, 1.7 கோடி மகளிர் உடைய நிதி சுதந்திரத்தையும், நிதி மேலாண்மை உறுதிசெய்து தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி கொண்டிருக்கிறது. நீடித்த வளர்ச்சி இலக்கு அடைவதற்கு கிராம ஊராட்சிகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு திராவிட மாடல் ஆட்சி என்பதை உலகிற்கு நாம் உணர்த்திட போகிறோம். நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடைவதன் மூலமாக தமிழக கிராம ஊராட்சிகள் தேசிய அளவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும்.
உத்தமர் காந்தி விருது
கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்க முன்மாதிரி கிராம விருது, உத்தமர் காந்தி விருது, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்பட கூடிய சிறந்த தொழில் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு விருது என, பல்வேறு விருதுகளை தமிழக அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது. மாநில அளவிலும் மற்றும் ஒன்றிய அளவிலும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த திட்டங்களை எல்லாம் திறன்பட தேவைக்கேற்ப ஒருங்கிணைத்து கடைக்கோடி மக்களிடம் கொண்டு பேசியிருப்பது உள்ளாட்சி அமைப்புகளால் தான் முடியும்.
மக்கள் குறைகள் இந்த கிராமத்தில் மட்டுமல்ல அனைத்து கிராமங்களிலும் இருக்கிறது. ஏனென்றால் ஏறக்குறைய, 10 ஆண்டுகாலமாக ஒரு ஆட்சி இருந்தது. அந்த ஆட்சியில் முறையாக உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் கூட நடத்த முடியாத நிலை இருந்தது தற்போது தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். உள்ளாட்சி பிரதிநிதிகள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் நூத்துக்கு நூறு சதவீதம் உள்ளாட்சி பிரதிநிதிகளாக ஆளும்கட்சி இல்லை. 5 சதவிகிதத்திற்கு மேல் எதிர்க்கட்சியை சார்ந்தவர்களும் பொறுப்பிற்கு வந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் எதிர்க்கட்சி இன்னொரு கட்சி என்றும் பாராமல் எந்த கட்சியை சார்ந்த இருந்தாலும் அந்த ஊராட்சிகளுக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ அவை அனைத்துமே செய்து கொடுக்கப்படும். நான் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? என்பதை மீண்டும் வந்து பார்ப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion